முந்தய பக்கம்

உங்கள் கனவைச் சொல்லுங்கள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

24 Jan 2026, 3:38 pm
உங்கள் கனவைச் சொல்லுங்கள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
<p><strong>உங்கள் கனவைச் சொல்லுங்கள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு</strong></p> <p>கள்ளக்குறிச்சி, ஜன. 24- &nbsp;கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் &ldquo;உங்கள் கனவைச் சொல்லுங்கள்&rdquo; திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட்டத்திற்காக 855 கணக்கெடுப்பா ளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள குடும்பங்களைச் சந்தித்து, அவர்கள் இதுவரை பயன் பெற்ற அரசுத் திட்டங்கள் மற்றும் அவர்களின் எதிர்காலக் கனவுகள் குறித்துக் கேட்டறிந்து களப்பணி மேற்கொண்டு வருகின்றனர். விண்ணப்ப முறைகள் மற்றும் கைபேசி செயலியில் விபரங்களைப் பதிவேற்றம் செய்வது குறித்துச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்த ஆட்சியர், இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினார். இந்த ஆய்வின் போது மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram