முந்தய பக்கம்

சொல்லடி பாப்பா!

29 Nov 2025, 1:28 pm
            சொல்லடி    பாப்பா!
<p><strong>&nbsp;சொல்லடி &nbsp; &nbsp;பாப்பா!</strong></p> <p>இல்லார்க்கும் நல்லார்க்கும் எல்லார்க்கும் வாழ்விலின்பம் இங்குக் கிடைக்குமென்று சொல்லடி பாப்பா - அதற்கு ஏற்ப அடியெடுத்து வெல்லடி பாப்பா. &nbsp;கல்லார்க்கும் கற்றார்க்கும் எல்லார்க்கும் உற்றதுணை என்றும் இருப்பதாகச் சொல்லடி பாப்பா - பகை இருட்டை எரித்ததிலே வெல்லடி பாப்பா. &nbsp;பொல்லார்க்கும் போற்றும்வழிச் செல்லார்க்கும் அச்சமின்றிப் போரைத் தொடுப்பனென்று சொல்லடி பாப்பா - பகை புன்மை தடையுடைத்து வெல்லடி பாப்பா. &nbsp;இல்லாரை ஏய்த்துவரும் &nbsp;வல்லார்தம் பொன்பொருளை இங்குப் பொதுமையிடச் சொல்லடி பாப்பா - வல்லார் இன்னல் தனைக்கடந்து வெல்லடி பாப்பா. &nbsp;உள்ளத்தில், ஏழையரை &nbsp;உள்ளடக்கி அன்னவரும் ஓங்கும் நிலையெடுத்துச் சொல்லடி பாப்பா - உலகம் உன்னைப் பணிந்துவர வெல்லடி பாப்பா.</p>
Share
FacebookXWhatsAppTelegram