முந்தய பக்கம்

யாரை தண்டிக்க தடை? - டெலிகிராம் நிறுவனர் கண்டனம்!

17 Jun 2026, 12:26 pm
யாரை தண்டிக்க தடை?  - டெலிகிராம் நிறுவனர் கண்டனம்!

தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் சிலர் தகவல்களைப் பகிர்ந்ததாகக் கூறி, டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்ததற்கு டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்வு வினாத்தாள்களைக் கசியவிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இந்தியாவில் டெலிகிராமைப் பயன்படுத்தும் 15 கோடிக்கும் அதிகமான சாதாரண பயனர்களையே இந்தத் தடை தண்டித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், “டெலிகிராமுக்கு விதிக்கப்பட்ட தடை எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவில்லை. கசிந்த தகவல்கள் பிற செயலிகளுக்குச் சென்றுவிட்டன. எனவே, இந்த நடவடிக்கை அதன் நோக்கத்தை அடையத் தவறியுள்ளது” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram