டெலிகிராம் தடை - பின்னணியில் ரிலையன்ஸ்?
17 Jun 2026, 6:21 pm

இந்தியாவில் டெலிகிராம் செயலியின் தடைக்கு ரிலையன்ஸ் குழுமம்தான் காரணம் என அதன் நிறுவனர் பாவேல் துரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜூன் 21 அன்று ‘நீட்’ மறு தேர்வு நடைபெற உள்ள நிலையில், முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஜூன் 22 வரை இந்தியாவில் ‘டெலிகிராம்’ செயலி பயன்பாட்டிற்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை (NTA), தகவல் தொழில் நுட்பம் சட்டம், 2000 பிரிவு 69ஏ கீழ் இந்தியாவில் டெலிகிராம் பயன்பாட்டிற்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறதாகவும், ஏற்கெனவே அனுப்பிய மேசேஜ்களை எடிட் செய்யும் அம்சத்திற்கு ஜூன் 30-ஆம் தேதி வரை தடைவிதிக்கப்படுகிதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தற்காலிக தடைக்கு, மெட்டா நிறுவனத்துடன் பங்கு வைத்துள்ள ரிலையன்ஸ் குழுமம் மற்றும் வாட்ஸ்அப்தான் காரணம் என்று டெலிகிராம் நிறுவனர் பாவேல் துரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.

அங்கீகரிக்கப்படாத வழித்தடத் தகவல்களை ஒளிபரப்புவதன் மூலம் இணையப் போக்குவரத்தைத் தவறான வழியில் செலுத்தும் ஒரு முறையான, பார்டர் கேட்வே புரோட்டோகால் (BGP) ஹைஜாக்கிங் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட இந்தியாவிற்கு வெளியே உள்ள பயனர்களுக்கான அணுகலை ரிலையன்ஸ் சீர்குலைப்பதாகவும் பாவெல் துரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.