டெலிகிராம் பயன்பாட்டுக்கு தற்காலிக தடை - ஒன்றிய அரசு விளக்கம்!
16 Jun 2026, 12:50 pm
<p>டெலிகிராம் செயலி பயன்பாட்டுக்கு தற்காலிக தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் (NEET) தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.</p><p>வினாத்தாள் டெலிகிராம் செயலி மூலம் பரவியதாகக் கூறப்படும் நிலையில், நீட் மறுதேர்வு நிறைவடையும் வரை டெலிகிராம் செயலியின் பயன்பாட்டுக்கு ஒன்றிய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், வினாத்தாள் எவ்வாறு கசிந்தது என்பதற்கான பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்யாமல், தகவல் பரவியதாகக் கூறப்படும் செயலியை மட்டும் தடை செய்வது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.</p>
