‘டெலிகிராம் தடை உண்மையான குற்றவாளிகளுக்கான தண்டனையல்ல’
17 Jun 2026, 8:35 pm

‘டெலிகிராம் தடை உண்மையான குற்றவாளிகளுக்கான தண்டனையல்ல’

நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்கி றோம் என கூறிக்கொண்டு ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு மோடி அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. ஒன்றிய அர சின் இந்த உத்தரவை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தன. இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசா ரணை நடத்தினர். கடும் எதிர்ப்பை தொ டர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.இதனால் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோ ரிக்கைகளும் வலுத்தது. ஆனால் மோடி அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்கா மல் உள்ளது.

இந்நிலையில் டெலிகிராம் வழியாக கேள்வித்தாள்கள் விற்பனை செய்யப் பட்டதால் அந்த செயலியை தடை செய்துள் ளது. அரசின் இந்தத் தடை உத்தரவிற்கு டெலி கிராம் செயலியின் நிறுவனர் பவெல் துரோவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தத் தடை வினாத்தாள்களைக் கசியவிட்ட உண் மையான நபர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை அல்ல. மாறாக, எந்தத் தவறும் செய்யாமல் இந்தச் செயலியைத் தங்களின் அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் 15 கோடி இந்தியப் பயனர்களுக்கு அரசு வழங்கிய கடுமையான தண்டனை என பாஜக அரசை விமர்சித்துள்ளார்.