தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தெலுங்கானாவில் காரணமின்றி 2.01 லட்சம் வாக்காளர்கள் முடக்கம் 25.1% முஸ்லிம்கள் என சபார் நிறுவனம் அறிக்கை!

4 Oct 2026, 9:51 pm
தெலுங்கானாவில் காரணமின்றி  2.01 லட்சம் வாக்காளர்கள் முடக்கம் 25.1% முஸ்லிம்கள் என சபார் நிறுவனம் அறிக்கை!

தெலுங்கானாவில் காரணமின்றி 2.01 லட்சம் வாக்காளர்கள் முடக்கம் 25.1% முஸ்லிம்கள் என சபார் நிறுவனம் அறிக்கை!

காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிரத் திருத்தப் (எஸ்.ஐ.ஆர்.) பணி நடைபெற்று வருகிறது. விரைவில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், தெலுங்கானாவில் காரணமின்றி 2.01 லட்சம் வாக்காளர்கள் முடக்கப்பட உள்ளதாகவும், இதில் 25.1% வாக்காளர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ‘சபார் இன்ஸ்டிடியூட்’ (Sabar Institute) தனது ஆய்வறிக்கை மூலம் அம்பலப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:”எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பிறகு தெலுங்கானாவில் வெளியிடப்பட்ட வாக்காளர் தரவுத்தள முரண்பாட்டுப் பட்டியலில் மொத்தம் 36,169 வாக்குச்சாவடிகள் மற்றும் 92,85,255 பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதாவது, இவர்களது பெயர்கள் உடனடியாக நீக்கம் செய்யப்படாமல், தங்களது வாக்குரிமையை நிரூபிக்கக் கோரியும் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கோரியும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதுவரை நோட்டீஸ் பெற்றவர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து முடக்கப்படுவர். ஆவணங்கள் சரியில்லை என்றால், 92 லட்சம் வாக்குகளையும் தேர்தல் ஆணையம் நீக்கிவிடும்.

இத்தகைய சூழலில், 92 லட்சம் விசாரணை சம்மன் களில் சுமார் 2,01,249 வாக்காளர்களுக்குக் காரணம் குறிப்பிடப்படாமல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன (எதற்கு நோட்டீஸ், என்ன வகையான கூடுதல் ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை). உப்பல் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் 77 வாக்காளர்களுக்குக் காரணம் குறிப்பிடப்படாமல் சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளன. காமாரெட்டியிலும் ஒரு வாக்குச்சாவடியில் 75 வாக்காளர்களுக்கு இதேபோல் சம்மன்கள் வந்துள்ளன.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம் சமூகத்தினரின் மக்கள்தொகை பங்கு 12.7% ஆகும். ஆனால், தற்போது காரணம் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர். விசாரணை சம்மன்களில் 25.1% பெயர்கள் முஸ்லிம் பெயர்களாக உள்ளன. இது அம்மாநிலத்தின் முஸ்லிம் மக்கள்தொகை விகிதத்தை விட ஏறக்குறைய இரு மடங்காகும்” எனச் சபார் நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.எனினும், சபார் இன்ஸ்டிடியூட் ஆய்வறிக்கையில் படிவம்-7 (நோட்டீஸ் அனுப்பி வாக்காளர்களை நீக்கும் நடைமுறை) தொடர்பான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.