முந்தய பக்கம்

தெலுங்கானாவில் கிச்சடி சாப்பிட்ட 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

10 Jul 2026, 8:02 pm
தெலுங்கானாவில் கிச்சடி சாப்பிட்ட 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
<p><strong>தெலுங்கானாவில் கிச்சடி சாப்பிட்ட 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி</strong></p><p>தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் நாகர்கர்னூல் பகுதி யில் உள்ள பழங்குடியின மாணவர் விடுதியில், கிச்சடி உணவு உட் கொண்ட பிறகு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 40 மாணவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வியாழனன்று விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவைச் சாப்பிட்ட சில மாண வர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக விடுதி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும் முதலுத விக்காக அருகிலுள்ள மன்னனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அச்சம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அனைத்து மாணவர்களின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாகவும், யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் மருத்துவக் குழுவினர் உறுதி அளித்துள்ளனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து மாவட்ட அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram