முந்தய பக்கம்

தெலுங்கானா மாணவர்களுக்கு காலை உணவில் தோசை, பூரி..!

28 May 2026, 9:59 pm
தெலுங்கானா  மாணவர்களுக்கு காலை உணவில் தோசை, பூரி..!

தெலுங்கானா மாணவர்களுக்கு காலை உணவில் தோசை, பூரி..!

ஹைதராபாத், மே 28 - தெலுங்கானாவில் இடை நிலை மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட வுள்ளது.

இந்தத் திட்டத்தைத் ஜூன் 12 அன்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், இந்த காலை உணவுத் திட்டத்திற்கான உண வுப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் போண்டா, தோசை, பூரி, சிறுதானிய இட்லி, உப்புமா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இவற்றிலிருந்து மாணவர்களுக்கு தினமும் ஒரு உணவு வழங்கப்பட உள்ளது.

மாணவர்களுக்கு முறையான ஊட்டச்சத்தை வழங்கும் வகை யில் இந்தப் பட்டியல் வடிவ மைக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்றுண்டிகளில் சட்னி, சாம்பார், கலவை காய்கறி குருமா ஆகியவை வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக அரசு ஆண்டு தோறும் ரூ. 120 கோடி செலவிடும்.

மாநிலத்தில் உள்ள 1.92 லட்சம் இடைநிலை மாணவர்கள் இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில், இடைநிலை மாணவர்களுக்கும் ஏற்கெனவே மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது காலை உணவும் இணைக்கப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram