தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகளுக்கு உயர்தர நெல் விதைகள் வழங்க வேண்டும் அதிகாரிகளுக்கு தெலுங்கானா முதலமைச்சர் உத்தரவு

16 Jun 2026, 8:51 pm
விவசாயிகளுக்கு உயர்தர நெல் விதைகள் வழங்க வேண்டும் அதிகாரிகளுக்கு தெலுங்கானா முதலமைச்சர் உத்தரவு
<p><strong>விவசாயிகளுக்கு உயர்தர நெல் விதைகள் வழங்க வேண்டும் அதிகாரிகளுக்கு தெலுங்கானா முதலமைச்சர் உத்தரவு</strong></p><p>தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் உள்ள பிரஜா பவனில் திங்கள்கிழமை நடைபெற்ற விவசாயத்திற்கான அமைச்சரவை துணைக் குழு கூட்டத் தில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல தேவையைக் கொண்டுள்ள 8 பிரீமியம் நெல் ரகங்களை ஊக்குவிக்க, மாநில அரசு பெரிய அளவிலான விழிப்பு ணர்வு பிரச்சாரங்களைத் தொடங்க வேண்டும் என்று விவசாய நிபுணர்க ளும், விஞ்ஞானிகளும் வலியுறுத்தி யுள்ளனர். மேலும் லாபகரமான, ஏற்று மதிக்கு உகந்த ரகங்களாகக் கருதப் படும் பிபிடி 5204, தெலுங்கானா சோனா (RNR 15048), கேஎன்எம்-1638, ஜெய் ஸ்ரீராம், எச்எம்டி, டபிள்யுஜிஎல் (WGL) 962, டபிள்யுஜிஎல் 44 மற்றும் ஜேஜிஎல் 1798 ஆகிய நெல் ரகங்களைப் பெரிய அளவில் சாகுபடி செய்ய நிபுணர்கள் பரிந்துரைத்தனர்.</p><p>இந்நிலையில், விவசாயிகளுக்கு உயர்தர நெல் இரக விதைகள் கிடைப் பதை உறுதி செய்யுமாறு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”சிறந்த விவ சாய நடைமுறைகள், கூடுதல் விளைச்ச லைப் பெற தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். மாநில அரசு எந்த ஏழு சன்ன ரக நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 500 போனஸ் வழங்குகிறதோ, அந்த ரகங்களின் விதை கள் விவசாயிகளுக்குக் கிடைப்பதற்காகத் தயாராக வைக்கப்பட வேண்டும்” என அவர் உத்தரவிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.