தீக்கதிர் விரைவு செய்திகள்
15 Jun 2026, 9:07 pm

தெலுங்கானா அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் திங்களன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாண வர்களுக்குச் சத்தான காலை உணவு வழங்கப்படுகிறது. இதில் சிறுதானிய இட்லி, ராகி கூழ் மற்றும் பால் ஆகி யவை இடம்பெற்றுள்ளன. தொடக்க குறிப்பாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாணவர்களுக்குப் பல்வேறு வகை யான உணவுகள் சுழற்சி முறையில் வழங்கப்படுகின்றன. இதில் சிறுதானி யங்கள் சார்ந்த உணவுகளுக்கு முக்கி யத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உண வுப் பட்டியலில் சிறுதானிய இட்லி, ராகி கூழ், பால், தோசை, பூரி, போண்டா போ ன்ற உணவுகளும் இடம்பெற்றுள்ளன.

கேரளத்தில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் தொடக்கம்

கேரளத்தில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜன நாயக முன்னணி தனது தேர்தல் வாக்கு றுதிப்படி அரசுப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் இலவசமாகப் பயணிக்கும் ‘பிரியதர்ஷினி’ திட்டத்தை திங்களன்று தொடங்கியுள்ளது. எர்ணாகுளத்தில் நடை பெற்ற விழாவில் முதலமைச்சர் வி.டி.சதீசன் இத்திட்டத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்த மான (KSRTC) சாதாரண, நகரப் பேருந்து கள் உட்பட 7 வகையான சாதாரண பேருந்துகளில் பெண்கள், திருநங்கை கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம்.

மணிப்பூரில் பதற்றம்

மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் இரு பிரிவினரி டையே திங்களன்று காலை ஏற்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்தனர். குக்கி சமூகத்தினர் பெரும்பான்மை யாக வாழும் காங்போக்பி மாவட்டத்தின் லெய்லோன் வைபே கிராமத்திற்கு அருகே திங்களன்று காலை 6 மணிய ளவில் இரு பழங்குடியின சமூகங்க ளைச் சேர்ந்த ஆயுதமேந்திய கும்பல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இச்சம்ப வத்தில் கென்லென்மாங் வைபே (18), லுன்லியாண்டாவ் வைபே (20), பாவுகோ லால் (18) ஆகிய மூன்று இளைஞர்கள் காயமடைந்தனர்.