தீக்கதிர் முக்கிய செய்திகள்
10 May 2026, 8:47 pm

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத்

லாலு பிரசாத்தை அவதூறாகப் பேசுவார்கள். வீட்டை காலி செய்வார்கள். ஆர்ஜேடி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வார்கள். சாதி அடிப்படையில் என்கவுண்ட்டர்களை நடத்துவார்கள். இதைத் தவிர பாஜக அரசால் வேறு என்ன தான் செய்துவிட முடியும்.? பார்க்கலாம்.

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி போன்ற சிறிய பகுதிகளையும், 90 தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரையும் சமமாக நடத்துவதன் தர்க்கம் புரியவில்லை. இரண்டு அதிகார மைய (ஒன்றிய அரசு/துணைநிலை ஆளுநர் மற்றும் மாநில அரசு) முறை என்பது பேரழிவிற்கான வழி ஆகும்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

கிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம் அங்குள்ள தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை அழித்துவிடும். இந்தத் திட்டத்தின் தற்போதைய வடிவம், விவரங்களின் அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, ஆழமாகச் சிந்தித்து, மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.

பத்திரிகையாளர் தான்யா ராஜேந்திரன்

காவல்துறை விசாரணை தொடங்குவதற்கு முன்பே, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் சஞ்சய் பண்டிட் தனது மகனுக்கு எதிரான போக்சோ புகாரை ஒரு சதி என்று கூறுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, அச்சமூட்டக்கூடியது. அவர் இப்போதைக்கு இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பதே முறை.