தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பதின்ம வயது கருவுறுதல்! பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை நூறாண்டு பின்னுக்குத் தள்ளும் ஆபத்து

27 Feb 2026, 5:32 pm
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பதின்ம வயது கருவுறுதல்!  பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை நூறாண்டு பின்னுக்குத் தள்ளும் ஆபத்து
<p><strong>தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பதின்ம வயது கருவுறுதல்! &nbsp;பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தை நூறாண்டு பின்னுக்குத் தள்ளும் ஆபத்து</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, பிப். 27 - &ldquo;சமுதாயத்தில் இன்று பெருகி வரும் பல்வேறு குற்றச் செயல்களுக்குப் பள்ளிப் படிப்பைப் பாதி யிலேயே நிறுத்தும் இடைநிற்றலே முதன்மையான காரணமாக அமைகிறது. கல்வி இடைநிற்றலை முழுமையாக ஒழிப்பதன் மூலமே பதின்ம வயது கர்ப்பங்கள் மற்றும் முறையற்ற - குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்த முடியும்&rdquo; என்று தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் விஜயா மிக ஆணித்தரமாகத் தெரிவித்தார். &nbsp;மாதர் சங்க கலந்தாய்வு &nbsp;அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டக் குழுக்கள் &nbsp;சார்பில், &ldquo;அதிகரித்து வரும் பதின்ம வயது கர்ப்பம் மற்றும் களப்பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்&rdquo; குறித்த முக்கியக் கலந்தாய்வுக் கூட்டம் &nbsp;திருச்சியில் வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாதர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் உ.நிர்மலா ராணி தலைமை தாங்கினார். புறநகர் மாவட்டச் செயலாளர் மல்லிகா வரவேற்றுப் பேசினார். &nbsp;அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களும் எச்சரிக்கையும் &nbsp;கருத்தரங்கில் மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ.ராதிகா தனது தொகுப்புரையில் முன்வைத்த புள்ளிவிவரங்கள் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தின. &ldquo;திருச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் சுமார் 834 பதின்ம வயது கர்ப்பங்கள் அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய தரவாகும். வட மாநி லங்களில் மட்டுமே இத்தகைய சமூகச் சீர்கேடுகள் அதிகம் இருப்பதாகக் கருதப்பட்ட பொதுவான பிம்பத்தை உடைத்து, பகுத்தறிவு மற்றும் பெண் உரிமைகளைப் பற்றித் தொடர்ந்து பேசி வரும் தமிழகத்திலேயே இந்தப் பாதிப்பு இவ்வளவு தீவிரமாக இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது&rdquo; என்று அவர் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், &ldquo;சாதியக் கட்டுப்பாடுகள் மற்றும் குடும்பக் கௌர வம் என்ற பெயரில் நெருங்கிய உறவினர்களுக்கு ள்ளேயே செய்யப்படும் பதின்மப் பருவ - மற்றும் - முறையற்ற திருமணங்களே இத்தகைய இளம் வயது கர்ப்பங்களுக்கு முதன்மைக் காரணமாகும். இந்தப் போக்கு பெண் குழந்தைகளின் கல்வியையும் அவர் களது ஒளிமயமான எதிர்காலத்தையும் நூறாண்டுகள் பின்னோக்கித் தள்ளும் ஆபத்தைக் கொண்டுள்ளது. போக்சோ வழக்குகளைக் கையாள் வதில் காவல்துறை மற்றும் நீதிமன்றங்களின் அணுகுமுறை இன்னும் மேம்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகப் பார்க்கும் மனநிலை மாற வேண்டும். இதற்குத் தீர்வாக, கேரளா அரசு பின்பற்றுவதைப் போன்ற பெண் குழந்தைகள் நலக் கொள்கைகளைத் தமிழக அரசும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இது குறித்து வெளிப்படையாக உரையாட வேண்டும்&rdquo; என்று வலியுறுத்தினார். &nbsp;கல்வி இடைநிற்றலும் நிர்வாகத் தோல்வியும் &nbsp;சிறப்புரையாற்றிய மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் விஜயா, &nbsp;இன்றைய சூழலில் நிலவும் நிர்வாகக் குறைபாடு களைப் பட்டியலிட்டார். தமிழக அரசு கல்வித் துறைக்காக ஆண்டுக்கு சுமார் 48,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இவ்வளவு பெரிய நிதி வசதிகள் இருந்தும், மாவட்ட மற்றும் வட்டார அளவில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்துவது ஏன் என்பதை அரசு தீவிரமாக ஆராய வேண்டும். பள்ளிக்குச் செல்லாமல் தெருக்களில் அலைந்து திரியும் குழந்தைகள் எளிதாகச் சமூக விரோதச் செயல்களுக்கு ஆட்படுகிறார்கள். 14 வயதுச் சிறுமி, தான் ஏழு மாத கர்ப்பமாக இருப்பது கூடத் தெரியாமல் மருத்துவமனைக்கு வரும் அவல நிலை நீடிக்கிறது. ஒரு மாணவியின் உடலில் ஏற்படும் இத்தகைய உயிரியல் மாற்றங்களைப் பள்ளியில் உள்ள பெண் ஆசிரியர்கள் கூடக் கவனிக்கத் தவறுவது வருத்தத்திற்குரியது. ஆசிரி யர்களுக்கு இது குறித்த கூடுதல் விழிப்புணர்வும் கண்காணிப்பும் அவசியமாகிறது. &nbsp;டிஜிட்டல் ஆபத்தும் உறவினர்களின் அத்துமீறலும் &nbsp;இன்றைய செல்போன் கலாச்சாரம் குறித்துப் பேசிய அவர், &ldquo;10 வயதுக் குழந்தைக்குத் தெரிய வேண்டிய விஷயங்கள் மிக விரைவாகவும், சில நேரங்களில் தவறான முறையிலும் சென்றடை கின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கைகளில் இருக்கும் செல்போன் எனும் கொள்ளிக் கட்டையை அவர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொருளாதாரத் தேடலில் தாய், தந்தை இருவரும் ஓடிக்கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள், தனி அறைகளில் முடங்கிச் சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களுடன் பழகிப் பாதுகாப்பற்ற சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்கள் குறித்து ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது&rdquo; என்றார். மேலும் ஒரு கசப்பான உண்மையை அவர் உரக்கச் சொன்னார்: &ldquo;பாலியல் அத்துமீறல்களுக்குப் பலியாகும் குழந்தைகளில் பெரும்பாலோர் அந்நியர்களால் பாதிக்கப்படுவதில்லை; நன்கு தெரிந்த 40 முதல் 50 வயதுடைய உறவினர்களே இதற்கு 50 சதவீதக் காரணமாக இருக்கிறார்கள். எனவே, குழந்தைகளுக்குப் &lsquo;பாதுகாப்பான தொடுதல்&rsquo; மற்றும் &lsquo;பாதுகாப்பற்ற தொடுதல்&rsquo; குறித்த முறையான பாலியல் கல்வியைப் பள்ளிகளிலேயே வழங்க வேண்டும். பெண் பிள்ளைகளை மட்டும் வீட்டு வேலைகளுக்குப் பழக்குவதையும், ஆண் பிள்ளைகளுக்குத் தளர்வுகளை வழங்குவதையும் பெற்றோர்கள் கைவிட்டு இருபாலரையும் சமமாக வளர்க்க வேண்டும்&rdquo; என்று அறிவுறுத்தினார். தீர்வுகளுக்கான பரிந்துரைகள் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், திருமண மண்டபங்களில் மணமகன் மற்றும் மணமகளின் ஆதார் அட்டையைச் சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். குழந்தைகளுக்கெனப் பிரத்யேக &ldquo;குழந்தைகள் நேய காவல் நிலையங்கள்&rdquo; அமைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை ஆணையம் முன்வைத்துள்ளது. இந்தக் கலந்தாய்வில் திரட்டப்பட்ட அனைத்து ஆலோசனைகளும் கோரிக்கைகளும் அடுத்த 15 நாட்களில் தமிழக அரசுக்குச் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாதர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.பூமயில், மருத்துவர்கள் சுபாஷினி, ஜாஸ்மின், திவ்யா, பத்மபிரியா மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சீத்தா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, இந்திய மாணவர் சங்கத்தின் ஆமோஸ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாதர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.சரஸ்வதி நன்றியுரை கூறினார். &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;(ந.நி.)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.