தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு
22 Mar 2026, 4:19 pm
<p><strong>தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு</strong></p>
<p>630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு தூத்துக்குடி, மார்ச் 22 - தூத்துக்குடி அரசு அனல் மின் நிலையத்தில் உள்ள 5 ஆவது அலகில் ஏற்பட்ட டர்பைன் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இரு அலகுகள் செயல்படாத நிலையில், தற்போது ஏற்பட்டு உள்ள இந்தத் திடீர் பாதிப்பால் மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்குச் சொந்தமான தூத்துக்குடி அரசு அனல் மின் நிலையத்தில் மொத்தம் 5 அலகுகள் உள்ளன. ஒவ்வொரு அலகும் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 1,050 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, இந்த இரு அலகுகளி லும் தற்போது பராமரிப்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனால் 420 மெகா வாட் உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரு அலகுகள் மூலம் தற்போது 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது. சனிக்கிழமை இரவு டர்பை னில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு கார ணமாக, இந்த அலகிலும் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது 5 அலகுகளில் 3 அலகுகள் முடங்கியுள்ளதால், ஒட்டு மொத்த உற்பத்தித் திறனில் 630 மெகாவாட் குறைந்துள்ளது. தற்போது 420 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ கத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிக ரித்து, மின்சாரத் தேவை உயர்ந்துள்ள சூழ லில், இந்தத் திடீர் உற்பத்திப் பாதிப்பு மின்வெட்டு ஏற்படும் அபாயத்தை உருவாக்கி யுள்ளது. பழுதான 5 ஆவது அலகைச் சீரமைக்கும் பணியில் மின்வாரியப் பொறி யாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விரை வில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.</p>
