அரிதிலும் அரிதான வழக்கில் சிஐடியு வெற்றி ‘டீம் லீடர்’ என குறிப்பிடப்படும் ஊழியர்களும் தொழிலாளர்களே : நீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பு
31 Oct 2026, 10:11 pm

அரிதிலும் அரிதான வழக்கில் சிஐடியு வெற்றி ‘டீம் லீடர்’ என குறிப்பிடப்படும் ஊழியர்களும் தொழிலாளர்களே : நீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பு

காஞ்சிபுரம்,அக்.31-டீம் லீடர் என்று குறிப்பிடப்படும் ஊழியர்களும் தொழிலாளர்களே என்று தீர்ப்பளித்துள்ள காஞ்சிபுரம் நீதிமன்றம் ஊழியர்களுக்கான அனைத்து உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்கு பொருந்தும் என்று தனியார் நிர்வாகத்திற்கு இடித்துரைத்துள்ளது.தொழிற்தகராறு வழக்குகளில் பொதுவாக ஊதிய உயர்வு, போனஸ்மற்றும் பணிநீக்கம் போன்ற கோரிக்கைகளே அரசால் நீதிமன்ற ஆய்வுக்குப் பரிந்துரைக்கப்படும். ஆனால் அரிதிலும் அரிதாக, உற்பத்தித் திறன்மற்றும் தொழிலாளர் வகைப்பாடு தொடர்பாகவும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படுவது உண்டு.

அந்த வகையில், ஜி.கே.என்.டிரைவ்லைன் நிறுவன நிர்வாகம்,தொழிற்சங்கத்தின் பேர வலிமையைக் குறைக்கும் நோக்கத்துடன், தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தவர்களை வேண்டுமென்றே ‘டீம் லீடர்’என வகைப்படுத்தியது. அத்துடன், அவர்கள் தொழிலாளர்கள் பட்டியலில் வரமாட்டார்கள் என்றும், பிறதொழிலாளர்களுக்குரிய சலுகைகள் அவர்களுக்குப் பொருந்தாது என்றும் அறிவித்தது.

நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சிஐடியு வழிகாட்டுதலில் இயங்கும் ‘ஜி.கே.என். டிரைவ்லைன் தொழிலாளர்கள் சங்கம்’ சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து, அந்நிறுவனத்தில் பணியாற்றும் ‘டீம் லீடர்கள்’, 1947ஆம் ஆண்டைய தொழிற்தகராறு சட்டப் பிரிவு 2(s)-ன் படி ‘தொழிலாளி’ என்ற வகைப்பாட்டில் வருவார்களா? என்ற வினாவை எழுப்பியதோடு காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்குப் பரிந்துரைத்தது.

இவ்வழக்கில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விரிவான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில், நிர்வாகத்தால் ‘டீம் லீடர்கள்’ எனக் குறிப்பிடப்பட்ட 20 ஊழியர்களும் சட்டப்படி ‘தொழிலாளர்கள்’ என்ற வகைப்பாட்டிலேயே வருவார்கள் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்களுக்கு 2014-ஆம் ஆண்டு முதல் கிடைக்க வேண்டிய இழந்த ஊதிய உயர்வுஉட்பட அனைத்துச் சலுகைகளும் மீண்டும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தி தொழிற்சங்கப் பலத்தை பலவீனப்படுத்த நினைத்த நிர்வாகத்தின் முயற்சிக்கு இத்தீர்ப்பு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் இறுதிவரை உறுதியாகப் போராடிய 20 தொழிலாளர்களுக்கும், ஜி.கே.என். தொழிலாளர் சங்கம்மற்றும் அதன் மதிப்புறு தலைவர் எஸ். கண்ணன் ஆகியோருக்கும், நீதிமன்றத்தில் திறம்பட வாதாடிய வழக்கறிஞர் பிரதாபன் ஜெயராமன் மற்றும் அவரது குழுவில் இடம்பெற்றுள்ள வழக்கறிஞர்கள் எஸ்.ருத்ரநாத்,என்.பொன்னுரங்கம், ஜி.காவ்யா ஆகியோருக்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.