புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிட ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்
18 Jun 2026, 9:34 pm

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிட ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்

நாகர்கோவில்,ஜூன் 18- கன்னியாகுமரி மாவட்ட தொழில்முனை வோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII–TN) சார்பில் அரசு, அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள், தொழில் பயிற்சி நிறுவனங்கள், செவிலியர்கள் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு “நிமிர்ந்து நில்” தொழில் புத்தாக்க பயிற்சி முகாம் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் ஜூன் 18 அன்று நடைபெற்றது.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், பேராசிரியர்களிடையே பேசிய தாவது: தமிழ்நாடு அரசு இளைஞர்க ளிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவுச் சிந்தனைகளை ஊக்குவிக்கத், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலமாக ‘நிமிர்ந்து நில்’ ஹேக்கத்தான் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் தங்களிடம் உள்ள கற்பனைத்திறன் மற்றும் தனித்திறமைகளை பயன்படுத்தி, சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் புத்தாக்கப் படைப்புகளை உருவாக்க வேண்டும். அந்தப் படைப்பு கள் மூலம் எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த தொழில்முனைவோராக உருவாக முடியும்.

புதுமையை தேடுவதில் ஆர்வம்

மேலும், உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், அவர்களின் புது புது கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையில் அவர்களை பக்கு வப்படுத்திட வேண்டும். உதாரணமாக ஜெர்மனி நாட்டை பொறுத்த வரை மக்கள் தொகையில் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அந்த கிராமங்களின் கண்டு பிடிப்பு தான், இன்று நமது நாட்டில் பயன் பாட்டில் உள்ள உயர்தர நான்கு சக்கர வாகனங்கள் பெரும்பாலும் அங்கு தான் உருவாக்கப்படுகின்றன. காரணம் அடிப்ப டையிலேயே மாணவர்களுக்கு புதுமை யை தேடுவதில் ஆர்வமாக உள்ளார்கள். அன்றைய காலக்கட்டங்களில் வசதி படைத்தவர்களின் வாகனமாக மாட்டு வண்டி, குதிரைவண்டி இதுபோன்றவை புழக்கத்தில் இருந்தது. அவை படிப்படி யாக இன்ஜின் பொருத்தப்பட்டு, தற்போது இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களாக பொதுமக்களிடையே பரிமாண வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் ஆசிரியர்களாகிய நீங்கள் உயர்கல்வி பயிலும் மாணவர்களிடம் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சவால்களாக எடுத்து வெற்றிபெற முன் மாதிரியாக மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டும்.

தொழில்முனைவோரின் பங்களிப்பு முக்கியம்

ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் தொழில் முனைவோர்களை பாராட்டு கின்றது. அதுபோன்று நம் நாட்டிலும் பொரு ளாதார முன்னேற்றத்திற்குத் தொழில் முனைவோரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆசிரியர்கள் அடுத்த தலை முறையினர் புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்கிட முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசி னார். இப்பயிற்சி முகாமில் கன்னியாகுமரி மாவட்ட மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.எஸ்.ஸ்டார்வின், துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.