பணிநிலை மேம்பாட்டு ஊதியம் கேட்டு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
12 Nov 2025, 3:20 pm
<p><strong>பணிநிலை மேம்பாட்டு ஊதியம் கேட்டு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்</strong></p>
<p>சென்னை, நவ. 12 - பணிநிலை மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவையை வழங்கக் கோரி, அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரி யர்கள், சைதாப்பேட்டை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு புதனன்று (நவ.12) காத்திருப்பு போ ராட்டத்தை தொடங்கி உள்ளனர். யுஜிசி நெறிமுறைகளின்படி எம்.பில், பிஎச்டி பாடத்திற்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், யுஜிசி அறிவித்துள்ளபடி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இணைப் பேராசிரி யர் பணி மேம்பாட்டிற்கு பி.எச்டி கட்டாயம் என்பதை தளர்த்த வேண்டும்; புத்தொளி / புத்தாக்க பயிற்சி கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த 3 நாள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) மற்றும் மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல் கலைக் கழக ஆசிரியர் சங்கம் (மூட்டா) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்தை தொடங்கி யுள்ளன. போராட்டத்தினிடையே செய்தி யாளர்களிடம் பேசிய சங்கத்தின் நிர்வாகி நாகராஜன், “முதல் 5 ஆண்டு, அதற்கு பிறகு ஒவ்வொரு மூன்றாண்டுக்கும் பணிநிலை மேம்பாட்டு ஊதியம் உயர்த்தப்ப டும். 10 வருடம் பணி முடித்த இணைப் பேராசிரியர், 30 வருடம் பணி முடித்தால் பேராசிரியர் என நிலை உயர்த்தப்படுவார்கள். பணிநிலை மேம்பாட்டு ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணைப்படி 8 மண்டலங்களில் இரண்டு மண்ட லங்களில் பணிநிலை மேம்பாட்டு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது சென்னை, மதுரை, நெல்லை, தருமபுரி, திருச்சி, வேலூர் ஆகிய 6 மண்டலத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரி யர்கள் 6500 பேருக்கு வழங்கப்படா மல் உள்ளது. இதுதொடர்பாக பல கட்ட போராட் டங்கள் நடத்தியுள்ளோம். அமைச்சர், இயக்குநர் ஆகியோ ரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் இல்லை. நிதித்துறை ஒப்புதல் பெற்றுத் தான் அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அந்த அரசாணைப்படி ஊதியம் கேட்டு தொடர் காத்தி ருப்பு போராட்டம் நடத்துகிறோம். ஊதியத்திற்காக ஆசிரியர்கள் போ ராடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அரசு உதவி பெறும் கல்லூரி களை தனியார் பல்கலைக் கழகமாக மாற்றும் சட்டத்தை நிறுத்தி வைப்ப தாக அரசு அறிவித்துள்ளது. அந்தச் சட்டத்தின்படி 35 சதவிகிதம் தமிழ்நாட்டு மாணவர்களை சேர்க்க வேண்டும். அதற்கு மட்டும் தான் இடஒதுக்கீடு பொருந்தும். எஞ்சிய 65 விழுக்காடு அளவிற்கு வெளி மாநில மாணவர்களை சேர்க்கலாம். இடஒதுக்கீடு கிடையாது. இதனை ஏற்க முடியுமா? எனவே, இந்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என்றார்.</p>
