பணிமேம்பாட்டு ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டம் அரசு அலட்சியம்: ஆசிரியர்கள் கண்டனம்
28 Jan 2026, 2:33 pm
<p><strong>பணிமேம்பாட்டு ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டம் அரசு அலட்சியம்: ஆசிரியர்கள் கண்டனம்</strong></p>
<p>மதுரை, ஜன.28- தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசி ரியர்களுக்கு, அரசாணை எண்–5 (11.01.2021)ன் படி வழங்கப்பட வேண்டிய சட் டப்பூர்வமான பணிமேம் பாட்டு ஊதியம் மற்றும் அதற் கான நிலுவைத் தொகையை கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வரு வதை கண்டித்து, அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) மற்றும் பல்க லைக்கழக ஆசிரியர் சங் கங்களின் கூட்டமைப்பான மூட்டா (MUTA) சார்பில் மாநி லம் தழுவிய காத்திருப்பு போராட்டம் கடந்த ஒரு வார மாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை தமி ழக அரசின் உயர் கல்வித் துறை நிர்வாகம் இதுவரை உரிய முறையில் கவனிக்கா மல் அலட்சியமாக நடந்து வருவதாக ஆசிரியர்கள் குற் றம்சாட்டியுள்ளனர். இதன் காரணமாக போராட்டம் மேலும் தீவிரமடைந்து, அரசு உதவி பெறும் கல்லூரி களின் வாயில்களில் தொட ர்ச்சியாக போராட்டம் நடை பெற்று வருகிறது. மதுரையில், மதுரை காம ராஜர் பல்கலைக்கழகத்து டன் இணைந்த சமூக அறி வியல் கல்லூரி, கே.கே.நகர் வக்பு வாரியக் கல்லூரி, உசி லம்பட்டி பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் கல்லூரி, நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, பெருங்குடி சரஸ் வதி நாராயணா கல்லூரி, யாதவர் கல்லூரி, அமெரிக் கன் கல்லூரி உள்ளிட்ட அரசு உதவி பெறும் கல்லூரி களில் ஆசிரியர்கள் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். போராட்டத்தில் பேசிய ஆசிரியர்கள், உயர்கல்வித் துறை வெளியிட்ட அர சாணையின் அடிப்படை யில் அரசுக் கல்லூரி ஆசிரி யர்களுக்கு பணிமேம்பாட்டு ஊதியம் நிலுவைத் தொகை யுடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் களுக்கு அதே பலன் வழங் கப்படாமல் பாகுபாடு காட் டப்படுவதாக குற்றம்சாட்டினர். இந்த போராட்டத்தில் மூட்டா பொதுச் செயலாளர் ஏ.டி.செந்தாமரை கண்ணன் கலந்து கொண்டு உரை யாற்றினார். அவர் பேசுகை யில், “உயர்கல்வித்துறை அமைச்சர் ஜனவரி 2026-இல் பணிமேம்பாட்டுடன் கூடிய ஊதியம் வழங்கப்படும் என கொள்கை முடிவு அறி வித்திருந்த போதிலும், அதனை நடைமுறைப் படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஆசிரி யர்களை கடும் ஏமாற்றத் திற்கு உள்ளாக்கியுள்ளது. அரசு இனியும் அலட்சியம் காட்டினால், போராட்டங்கள் மேலும் தீவிரமடையும்” என எச்சரித்தார்.</p>
