கட்டணமில்லா மருத்துவக் காப்பீடு திட்டத்தை அறிவிக்காத அரசு ஆசிரியர் சங்கம் கண்டனம்
28 Jun 2026, 10:02 pm
<p><strong>கட்டணமில்லா மருத்துவக் காப்பீடு திட்டத்தை அறிவிக்காத அரசு ஆசிரியர் சங்கம் கண்டனம்</strong></p><p>சென்னை, ஜூன் 28- கட்டணமில்லா மருத்துவக் காப்பீடு திட்டத்தை அறிவிக்காத மாநில அரசுக்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பொ. அன்பழகன் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு 2026-2031 ஆம் ஆண்டிற்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு அரசாணையை வெளியிட்டு உள்ளது. அனைத்து நோய்களுக்கும் 100 சதவீதம் கட்டணமில்லா மருத்துவக் காப்பீட்டு திட்டம் வேண்டும் என்று ஆசிரி யர்களும், அரசு ஊழியர்களும் கோரி வருகிறோம். இதற்கு மாறாக, கடந்த திமுக அரசை போன்றே தவெக அரசும் ஊழி யர்களின் நலனை கருத்தில் கொள் ளாமல், காப்பீட்டு நிறுவனம் கொள்ளை யடிக்க ஏதுவாக அரசாணை வெளியிட்டு உள்ளது. ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் சந்தா தொகையும் 390 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத் தக்கது. அனைத்து நோய்களுக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் 100 சதவீதம் கட்டணம் இல்லா சிகிச்சை வழங்க கோரி வருகிறோம். அதனை செய்யாமல், ஏற்கெனவே இருந்த திட்டத்தையே காப்பி-பேஸ்ட் செய்து நடைமுறைப் படுத்தப்படுவது ஏற்பு டையதல்ல. கேரளத்தில் கட்டணமில்லா மருத்து வக் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படு கிறது. பல மாநிலங்களில் அதிகபட்ச தொகையுடன் கூடியதாக காப்பீடு திட்டம் உள்ளது. எனவே, கட்டணமில்லா மருத்துவக் காப்பீடு கோரிக்கைக்காக அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜாக்டோ-ஜியோவும், எஸ்டிஎப்ஐ அமைப்பும் இயக்கங்களை நடத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>
