தீக்கதிர் முக்கிய செய்திகள்
22 Dec 2025, 2:53 pm

ஜன.6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்

பெரம்பலூர்: பெரம்பலூரில் தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக் குழு கூட்டம், மாநிலத் தலைவர் ஜெயக்குமார் தலை மையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிறுவனத் தலைவர் மாயவன் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்டத் தலைவர் அன்புச்செல்வன் வரவேற் புரை ஆற்றினார். செயல் அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் குமரேசன் மற்றும் வரவு-செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் விஜயசாரதி ஆகியோர் முன்வைத்தனர். பெரம் பலூர் மாவட்டச் செயலாளர் அருண்குமார் நன்றி தெரிவித் தார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும். ஆசிரியர்கள் பணியில் நீடிக்கவும் பதவி உயர்வுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு நாடாளுமன்றத்தில் ஆர்டிஇ ஆக்ட் செக்சன் 23 திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

யுனெஸ்கோ அங்கீகரித்த விழாக்களில் பொங்கல் பண்டிகை இல்லை! சுப.வீரபாண்டியன் ஆதங்கம்

சென்னை: இந்து குழுமம், தமிழக சுற்றுலா துறை இணைந்து தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் பண்டைய சடங்குகள் என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய சுப.வீரபாண்டியன், “2009 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள பல்வேறு விழாக்களை யுனெஸ்கோ பட்டியலிட்டுக் கொண்டே வருகிறது. அதில் நவராத்திரி, துர்கா பூஜை, குஜராத்தில் மட்டும் கொண்டாடப் படும் குர்பா நடனம், கும்பமேளா, தீபாவளி ஆகியவற்றை இந்தியாவின் விழாக்கள் என யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ளது. ஆனால் இன்று வரை பொங்கல் பண்டிகை யுனெஸ்கோவின் அங்கீகரிக்கப்பட்ட விழாக்களில் இடம்பெறவில்லை. பொங்க லுக்கும் நம் உணர்வுகளுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு” என்றார்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பு

சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உதவி இயக்குநர் வேளாண்மை விரிவாக்கம், முதுநிலை அலுவலர் நிதி உள்ளிட்ட 14 பதவிகளுக்கான 76 காலிப் பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு, நேர்முகத் தேர்வு பதவிகள் நடத்தப்படு கிறது. விண்ணப்பதாரர்கள் 2026 ஜனவரி 20 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம். கணினி வழித் தேர்வு மார்ச் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

பள்ளிகளுக்கு 11 நாள் விடுமுறை சென்னை: டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப் படும் என்றும் விடுமுறை தினங்களில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என்றும் பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். செமஸ்டர் தேர்வு சென்னை: டிட்வா புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் வருகிற ஜன வரி மாதம் நடைபெற உள்ளதாக அண்ணா பல் கலைக்கழகம் அறிவித் துள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை சென்னை: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதி காரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழுப்பு ரம், திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஆட்சியர் கள் பங்கேற்றனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்ட நிலையில், 9 மாவட்டங்களின் ஆட்சியர் களுடன் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை கூட்டம்! சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக் கான திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழு ஆலோசனையில் ஈடுபட்டது. அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பின ரையும் சந்தித்து கருத்து களைக் கேட்டு, திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கவுள்ளது.