உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் நன்றி
5 Jan 2026, 6:21 pm
<p><strong>உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் நன்றி</strong></p>
<p>சென்னை, ஜன.6- தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 22 ஆண்டுகால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ அறிவித்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் கு.தியாகராஜன் விடுத்துள்ள அறிக்கை யில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறை வேற்றும் விதமாக, புத்தாண்டு பரிசாக ஆறரை லட்சம் ஊழியர்கள் பயன் பெறும் வகையில் இப்புதிய ஓய்வூ தியத் திட்டத்தை முதலமைச்சர் அறி வித்துள்ளார். இது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளது. இதற்காகத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து எங்களது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தோம். இக்கோரிக்கையை நிறைவேற்ற உறு துணையாக இருந்த துணை முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் அதில் மேலும் கூறியுள்ளார்.</p>
