கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
29 Nov 2025, 4:58 pm

கோவை, நவ.29- 7 வயது சிறுமியை குச்சியால் அடித்து காயப்படுத் திய ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே எலச்சி பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த 7 ஆம் தேதியன்று பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, 2 ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பெரியநாயகி குச்சி யால் தாக்கியதில் சிறுமியின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக திருப்பூர் மாவட்டம் அவினாசி யில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுமியின் காயம் குணமடையாததால், நவம் பர் 21 ஆம் தேதியன்று கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க் கப்பட்டார். சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு கிடைத் ததும், போலீசார் விசாரணை நடத்தினர். சூலூர் குற்றவி யல் நீதிமன்ற நடுவரிடம் அனுமதி பெற்று, ஆசிரியர் பெரியநாயகி மீது வழக்குப் பதிவு செய்தனர். குழந்தை கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சம்பவம் குறித்து துறை ரீதியாகவும் விசாரணை நடத்தப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் நேரில் விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து, எலச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பெரியநாயகியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து சனியன்று உத்தரவிட்டார். சிறுமியின் பெற்றோர் ஆரம்பத்தில் புகார் அளிக்க வில்லை என்றாலும், மருத்துவமனை மூலமாக சம்ப வம் வெளியானதால் துறை மற்றும் சட்ட ரீதியான நடவ டிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தருமபுரி, நவ.29- தருமபுரியில் இரு கார்கள் மோதிக்கொண்ட விபத் தில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் ஒருவர் படுகாயங்களு டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தருமபுரி வழியாக செல்லும் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி இரு கார்கள் சென்று கொண்டிருந்தன. கடகத்தூர் அருகே சென்ற போது, முன்னால் சென்ற காரை முந்த முயன்றபோது, எதிர்பாராமல் இரு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதி சாலையோரமிருந்த பள்ளத்தில் உருண்டன. இது குறித்த தகவலின்பேரில் வந்த காவல் துறையினர், கார் களில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஒருவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்ப திந்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உயிரி ழந்தவர் பெங்களூருவைச் சேர்ந்த அனிருத் (21) என்ப தும், அதிகாலை பெங்களூருவில் இருந்து சேலம் சென்ற போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. மேலும், காயமடைந்தவர் கேரளம் மாநிலம், திருச்சூர் பகுதி யைச் சேர்ந்த மிதுன்குமார் (24) என்பது தெரிய வந்தது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

தருமபுரி, நவ.29- 11 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உடற்பயிற்சி கூட உரிமை யாளரை காவல் துறையினர் கைது செய்த னர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கே.வேட்ரப்பட்டியை சேர்ந்தவர் சிலம்பர சன் (32). இவர் அரூரில் கடந்த ஏழு ஆண்டு களாக உடற்பயிற்சி கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு வந்த பெண் ஒருவரின் மகளான 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியு டன் சிலம்பரசனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் மாணவிக்கு சிலம்பரசன் பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளி யில் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இந்நிலையில் மாணவி தனக்கு நடந்த கொடு மை குறித்து தனது தாயாரிடம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிலம்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உயர் கோபுர மின்விளக்கு அமைத்துத்தர சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், நவ.29- திருப்பூர் மாநகரில் கொங்கு மெயின் ரோடு பகுதியில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்துத் தரும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரங்கநாத புரம் கிளைச் செயலாளர் பா.கார்த்திக், திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயனிடம் வெள்ளியன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பிரதான சாலையில் இருந்து கொடிக்கம்பம் மெயின் ரோடு சந்திக்கும் பகுதியில் தங்கம் மெடிக்கல் அருகில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்துத் தர வேண்டும். இப்பகுதியில் ஏராளமான இரு சக்கர, இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் சென்று வரு கின்றன. மக்கள் நெருக்கமும் அதிகமாக உள்ள இப் பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் விபத்து கள் நேரும் ஆபத்து உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதியும் உடனடியாக நிதி ஒதுக் கித் தந்து உயர் கோபுர மின்விளக்கு அமைத்துத்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.