முந்தய பக்கம்

இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு

14 Nov 2025, 1:26 pm
இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு
<p><strong>இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு</strong></p> <p>சென்னை, நவ. 14 - பள்​ளி​களில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை &nbsp;ஆசிரியர்​களுக்​கும், பட்​ட​தாரி ஆசிரியர் களுக்கும் டெட் எனப்​படும் ஆசிரியர் தகு​தித்​தேர்வு தேர்ச்சி கட்​டா​யம். டெட் தேர்​வில் தாள்-1 இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், தாள்-2 பட்​ட​தாரி ஆசிரியர்​களுக்​கும் நடத்​தப்​படு​கிறது. டெட் தேர்வை &nbsp;ஆசிரியர் தேர்வு வாரி​யம் நடத்தி வரு​கிறது. தமிழகத்​தில் 2025 ஆம் ஆண்டு டெட் தேர்​வுக்​கான அறி​விப்பை ஆசிரியர் தேர்வு &nbsp;வாரி​யம் கடந்த ஆக.11 ஆம் தேதி &nbsp;வெளி​யிட்​டது. இந்​நிலை​யில், ஏற்​கனவே அறிவிக்​கப்​பட்​ட​வாறு டெட் தேர்வு சனிக்கிழமை (நவ.15) தொடங்​கு​கிறது. முதல் நாளில் டெட் தாள்-1 தேர்​வும், 2 ஆவது நாளான ஞாயிற்​றுக்​கிழமை தாள்​-2 நடை​பெற உள்​ளன. தாள்-1 தேர்​வில் 1,07,370 பேர், தாள்​-2-இல் 3,73,438 பேர் என மொத்​தம் 4,80,808 பேர் கலந்​து​ கொள்​கின்​றனர். தாள்​-1-க்கு 367 தேர்வு மையங்​களும், தாள்​-2-க்கு 1,241 தேர்வு மையங்​களும் அமைக்​கப்​பட்​டுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram