தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

16 Nov 2025, 3:30 pm
திருச்சி விரைவு செய்திகள்

தஞ்சையில் ஆசிரியர் தகுதித் தாள்-2 தேர்வு

தஞ்சாவூர், நவ.16-  தமிழகத்தில் சனிக்கிழமை ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) தொடங்கியது. முதல் நாளில் (நவ.15) இடைநிலை ஆசிரியர் பணிக்கான தாள்-1 தேர்வு நடைபெற்றது.  அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் தாள்-1 க்கான தேர்வு 10 மையங்களில் நடைபெற்றது. இரண்டாவது நாளான (நவ.16) ஞாயிற்றுக்கிழமை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தாள்-2 தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் தாள்-2 தேர்வு 35 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதற்காக 12,972 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதனை முன்னிட்டு தேர்வர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  தேர்வில் முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டு அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

தீக்கதிர் செய்தி எதிரொலி: டெல்டா விவசாயிகள் நன்றி

திருவாரூர், நவ.16-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டகுழு சார்பாக நவ.14 அன்று, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரனை நேரில் சந்தித்து, நவ.15 ஆம் தேதியுடன் சம்பா-தாளடி நெல் பயிருக்கான காப்பீட்டு முடியும் தேதியை நவம்பர் இறுதி தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.  மாவட்ட ஆட்சியரை சந்தித்த முழு விவரம் நவ.15 ஆம் தேதி, தீக்கதிர் நாளிதழில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களை காப்பீடு செய்வதற்கான தேதியை நவ.30 ஆம் வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதனை டெல்டா விவசாயிகள் வரவேற்று, சரியான நேரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு நன்றி தெரிவித்தனர்.

தனியார் பள்ளியில்  குழந்தைகளை வைத்து பாத பூஜை சிபிஎம் கடும் கண்டனம்

பொன்னமராவதி, நவ.16-  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கேசராப்பட்டியில் உள்ள சிடி இன்டர்நேஷனல் என்கிற தனியார் பள்ளியில் குழந்தைகள் தினத்தன்று பள்ளி குழந்தைகளை வைத்து பாத பூஜை செய்யப்பட்டது.  இந்த மிகவும் பிற்போக்குத்தனமான செயல்களை தடுக்கும் விதமாக மாவட்ட கல்வி அதிகாரி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து, வருங்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகள் மீது மேல் கடும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னமராவதி ஒன்றியக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.