அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று அரசு வேலை பெற்ற ஆசிரியர் கட்டிட நிதி உதவி
9 May 2026, 12:38 am
<p><strong>அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று அரசு வேலை பெற்ற ஆசிரியர் கட்டிட நிதி உதவி</strong></p><p>கும்பகோணம், மே 8- கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில், இலவசமாக எவ்வித கட்டணமும் இன்றி டாக்டர் அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. பயிற்சி மையத்தில் படித்த கோகிலா ராஜசேகர் என்பவர், போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பட்டதாரி ஆசிரியராக கீழ்வேளூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி வாய்ப்பு கிடைத்து பணியாற்றுகிறார். இந்நிலையில் சிஐடியு அலுவலகத்தில் இயங்கும், தான் படித்த கும்பகோணம் டாக்டர் அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்திற்கு நன்றி மறவாது, கட்டிட மேம்பாட்டு நிதியாக ரூ.10,000 வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இந்த மையத்தில் பயின்று வெற்றி பெற்று ஆசிரியர் பணி தொடங்கும் கோகிலாவிற்கு, சிபிஎம் மற்றும் சிஐடியு தொழிற்சங்க பொறுப்பாளர்கள் பயிற்சி மைய மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.</p>
