காதலிப்பதாகக் கூறி மிரட்டல் ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை!
18 Feb 2026, 3:04 pm
<p><strong>காதலிப்பதாகக் கூறி மிரட்டல் ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை!</strong></p>
<p>சேலம், பிப். 18- தன்னுடன் பழகிய புகைப்படங்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவேன் என வாலிபர் மிரட்டி யதால், மனமுடைந்த தனியார் பள்ளி ஆசிரியை தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத் தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த அழக னூர் ஆசாரி பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் விஜய லட்சுமி. இவரது மகள் சண்முகப்பிரியா (22). பி.இ. அக்ரி முடித்துள்ள இவர், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரி யையாகப் பணியாற்றி வந்தார். சண்முகப்பிரியா நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்ற போது, நங்கவள்ளி அருகே உள்ள அமரகுந்தி பகுதியை சேர்ந்த கௌதம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கௌதமின் நடவடிக்கைகள் பிடிக் காததால் சண்முகப்பிரியா அவருடனான பழக் கத்தை கைவிட்டுள்ளார். ஆனால், இதனை ஏற்காத கௌதம், முன்பு இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விடு வேன் என சண்முகப்பிரியாவை தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சண்முகப்பிரியாவிற்கு அவரது குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்த னர். திருமணத்தை தடுக்கும் நோக்கில் கௌதம் மீண் டும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்குள்ளான சண்முகப்பிரியா, புதனன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலை யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த மகுடஞ்சாவடி போலீசார், சண்முகப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் சோதனையில், சண்முகப்பிரியா எழுதிய 4 பக்க தற் கொலை கடிதம் சிக்கியது. அதில், “எனது சாவிற்கு கௌதம் தான் காரணம், அவர் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெளிவாகக் குறிப் பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்நிலையில், தற்கொலைக்கு காரண மான கௌதமை உடனடியாகக் கைது செய்ய வலி யுறுத்தி, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதர் சங்கம் கண்டனம் இளம்பெண் சண்முகப்பிரியா மரணத்திற்கு கார ணமான குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தமிழக அரசு உரிய நீதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும் பத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.எம்.தேவி தெரிவித்தார்.</p>
