கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
24 Dec 2025, 4:16 pm

பெண் குளிப்பதை படம் பிடித்த காவலர் கைது

கோவை, டிச.24- கோவையில் பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த காவலரை, மதுக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த மாதவ் கண்ணன் (29). இவர் பொள்ளாச்சி காவல் நிலைய அதிகாரி யின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் மதுக்கரை பகுதி யில் காவல் அதிகாரியின் இல்லத்தில் தனி அறையில் வசித்து வருகிறார். பணியின் காரணமாக சம்பந்தப்பட்ட காவல் அதி காரி அடிக்கடி வெளியே செல்வதால் தனது மகளை பார்த்துக் கொள்ள பெண் உறவினர் ஒருவரை வீட்டிற்கு அதிகாரி வர வழைத்துள்ளார். அவருடன் அந்த பெண் உறவினரின் 19 வயது மகளும் வந்து தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று இரவு காவல் அதிகாரி பணிக்காக வெளியே சென்றிருந்த நிலையில், கார் ஓட்டுநர் மாதவ் கண் ணன் தங்கியிருந்தார். அப்போது இரவு 10.30 மணியளவில் காவல் அதிகாரியின் உறவினர் பெண்ணின் மகள் உடை மாற்ற கழிவறைக்கு சென்றாத தெரிகிறது. அப்போது மாதவ் கண்ணன் தனது அறையில் இருந்த கழிவறை ஜன்னல் வழி யாக பெண் உடை மாற்றுவதை செல்போனில் படம் பிடித்த தாக கூறப்படுகிறது. இதை கண்ட இளம் பெண் சத்தம் போடவே, குடும்ப உறுப்பினர்கள் ஓடி வந்துள்ளனர். பின்னர் நீண்ட நேரம் கதவை தட்டியும் மாதவ் கண்ணன் கதவை திறக்காத நிலையில், வீட்டில் இருந்தவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து தகவலை கூறியுள்ளனர். இதை யடுத்து அங்கு வந்த அவர் மதுக்கரை போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அறையில் இருந்த மாதவ் கண்ணனை பிடித்து போலீசார் விசாரித்த போது செல் போனில் படம் பிடித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அதிகாரியின் புகார் அடிப்படையில் மதுக்கரை போலீசார் மாதவ் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 6 ஆம் தேதி வரை மாதவ் கண்ணனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தர விட்டார். இதையடுத்து காவலரை கோவை மத்திய சிறை யில் அடைத்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

உதகை, டிச.24- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த ஜக்கலோரை பகுதியைச் சேர்ந்த நஞ்சுண்டன் (35) என்பவர், தற்காலிகமாக அரசு பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இவர் தேனாடுகம்பை பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு திரு மண விழாவுக்கு சென்றுள்ளார். அங்கு மதுபோதையில் இருந்த நஞ்சுண்டன், அங்கிருந்த ஒரு சிறுமியை ஆசை வார்த்தை கூறி மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலி யல் தொல்லை அளித்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிட மும் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக் கப்பட்ட சிறுமி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரி வித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உதகை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகா ரளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு போக்சோ சட்டத்தில் நஞ்சுண்டனை கைது செய்த னர். இந்நிலையில், நஞ்சுண்டனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ஆட்சியருக்கு பரிந்துரைந்தார். இதை யடுத்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் உள்ள நஞ்சுண்ட னிடம் வழங்கப்பட்டது.

போக்சோ-வில் கைதான ஆசிரியர் உயிரிழப்பு

தருமபுரி, டிச.24- போக்சோ வழக்கில் கைதாகி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டி ருந்த அரசுப்பள்ளி ஆசிரியர் உயி ரிழந்தார். தருமபுரி, நல்லம்பள்ளியைச் சேர்ந்த மணிவண்ணன் (55). அப் பகுதியிலுள்ள அரசுப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின்பேரில், கடந்த டிச.16 ஆம் தேதியன்று காவ லர்கள் அவரை கைது செய்து, சிறை யில் அடைத்தனர். இந்நிலையில், சிறையிலிருந்த அவருக்கு திங்களன்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் அவர் உயிரி ழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தருமபுரி நீதித்துறை நடுவர் எண் 1 மாஜிஸ்ட்ரேட் தமிழரசு, மருத் துவமனை வளாகத்துக்கு செவ்வா யன்று விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து அவரது உடல் உடற் கூறாய்வுக்கு பிறகு, உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.