முந்தய பக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வு

15 Nov 2025, 4:09 pm
ஆசிரியர்    தகுதித்    தேர்வு
<p><strong>ஆசிரியர் தகுதித்தேர்வு</strong></p> <p>கோவை, நவ.15- கோவை மாவட்டத்தில் 15 மையங்களில் ஆசிரியர் &nbsp;தகுதித்தேர்வு நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு &nbsp;வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு &nbsp;(டெட்) சனி மற்றும் ஞாயிறு (இன்று) ஆகிய இரண்டு &nbsp;நாட்கள் நடக்கிறது. அதன்படி, மாவட்டத்தில் டெட் தாள்-1 தேர்வு சனியன்று 15 தேர்வு மையங்களில் நடை பெற்றது. இத்தேர்வை 3,890 தேர்வர்கள் எழுதினர். தொடர்ந்து டெட் தாள்-2 தேர்வு ஞாயிறன்று (இன்று) &nbsp;45 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வில் &nbsp;12,370 தேர்வர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வு மையங் களில் பள்ளிக்கல்வித்துறை மூலம் 4 வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 15 வழித்தட அலுவலர்கள், 60 முதன் மை கண்காணிப்பாளர்கள், 60 துறை அலுவலர்கள், 970 &nbsp;அறைக்கண்காணிப்பாளர்கள், 51 சொல்வதை எழுது பவர்கள் மற்றும் 120 நிலையான படை அலுவலர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்வினை முன்னிட்டு &nbsp;தேர்வு மையங்களுக்கான பாதுகாப்பு வசதிகள் வழங் கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் ஆசிரியர்கள் சோத னைக்கு பின் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப் பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram