காவல்துறை அத்துமீறல்களை தடுக்க வேண்டும் டீக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை
17 Nov 2025, 4:40 pm
<p><strong>காவல்துறை அத்துமீறல்களை தடுக்க வேண்டும் டீக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை</strong></p>
<p>சென்னை, நவ. 17 - காவல்துறையின் அத்து மீறல்களை தடுக்க வேண்டு மென்று டீக்கடை உரிமை யாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர்கள் சங்கத்தின் 44வது பொதுப் பேரவை ஞாயிறன்று (நவ.16) கேரள சமாஜம் அரங்கில் நடைபெற்றது. இந்தப்பேரவையில், இரவு நேரக் கடைகள் செயல்பட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் அதற்கான அரசாணை (எண்.214/8-5-2025) வெளியிட்டுள்ளது. இவற்றை முழுமையாக அமல்படுத்த வேண்டும். காவல்துறையின் அத்து மீறல்களை முழுமையாக தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக விரோதிகளின் அத்து மீறல்களை தடுக்க வேண்டும். டீக்கடைகளுக்கு குப்பை வரி இல்லை என்று மாநகராட்சி ஆணையரின் வாய்மொழி உத்தரவை, சுற்றறிக்கையாக வெளியிட வேண்டும்; தொழில் வரி விதிப்பதை கைவிட வேண்டும். டீக்கடை மற்றும் உணவகங்களில் அரசு அதி காரிகள் இலவசமாக பெறும் நடைமுறையை கண்டிப்புடன் தவிர்க்க வேண்டும். டீக்கடைகளுக்கான சமையல் எரிவாயு உருளை களுக்கு ஒன்றிய, மாநில அரசுகளின் ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்புத்துறை உரிமத்தை ஆயுள் உரிமமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவைக்கு சங்க த்தின் தலைவர் டி.அனந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் இ.விஜய குமார் (எ) சுந்தரம் ஆண்ட றிக்கையையும், பொரு ளாளர் சி.கே.தாமோதரன் வரவு செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். இதனை தொடர்ந்து 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு களை வழங்கினர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை மண்டலத் தலைவர் என்.டி.மோகன், மாநில தலைமை நிலையச் செயலாளர் பேரா.ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மத்தியசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சாமுவேல், சென்னை பெய்ன் அண்டு பெலியேட்டிவ் கேர் நிறு வனர் நவோதயா சுரேஷ் பாபு, பால் முகர்கள் தொழி லாளர்கள் நலச்சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னு சாமி உள்ளிட்டோர் பேசினர்.</p>
