தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேயிலை தோட்டத் தொழிலாளர் கோரிக்கை சிஐடியு தலைமையில் காத்திருக்கும் போராட்டம்

12 Nov 2025, 3:20 pm
தேயிலை தோட்டத் தொழிலாளர் கோரிக்கை சிஐடியு தலைமையில் காத்திருக்கும் போராட்டம்
<p><strong>தேயிலை தோட்டத் தொழிலாளர் கோரிக்கை சிஐடியு தலைமையில் காத்திருக்கும் போராட்டம்&nbsp;</strong></p> <p>உதகை, நவ.12- தோட்டத்தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம், போனஸ் உடனடியாக வழங்க &nbsp;வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து சிஐடியு தலை மையில் தொழிலாளர்கள் புத னன்று பிச்சை எடுத்து காத்திருக் கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாய்சோலை தனியார் தேயி லை தோட்ட நிர்வாகத்தின் கீழ் பணி யாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இதே போன்று, தாய்சோலை, தேவர் சோலை, நாடுகாணி ஆகிய எஸ் டேட்டுகளில் ஏராளமான தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) முன்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தி தொழிலா ளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன்கள் கொடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்ட பின்னும், தாய் சோலை தோட்ட நிர் வாகம் அமுல்படுத்தாமல் இருக்கி றது. &nbsp;எனவே, மாத சம்பளத்தை பிரதி &nbsp;மாதம் 07 ஆம் தேதிக்குள் வழங்க &nbsp;வேண்டும், 2025 செப்டம்பர், அக் டோபர் மாத சம்பளத்தை உடனடி யாக வழங்க வேண்டும். நிலுவை யில் உள்ள தீபாவளி &nbsp;போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பல வருடங்களாக நிலு வையில் உள்ள பணி ஓய்வு பெற்ற &nbsp;தொழிலாளர்களின் பணப் பயன் களை உடனே வழஙக வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழி லாளர்களை மீண்டும் பணியில் &nbsp;சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, சிஐடியு நீல கிரி எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் பிச்சை எடுத்து, காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். &nbsp;நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு, சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.வினோத் தலைமை ஏற் றார். இதில், பொருளாளர் நவீன் &nbsp;சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். முன்னதாக, பிச்சை எடுத்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடு பட முயன்ற போது மாவட்ட ஆட்சி யர் தலையிட்டு பிரச்சனைகளை தீர்த்து தருவதாக உறுதி அளித் தார். இதனையேற்று போராட்டம் &nbsp;தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட் டது. இப்போராட்டத்தில் ஏராள மான தோட்டத் தொழிலாளர்கள் &nbsp;பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.