தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘குறைந்தபட்ச செயல்திறன் வளையத்திற்குள் 5 சதவீத ஊழியர்கள்’ : டிசிஎஸ் முடிவு

22 May 2026, 8:59 pm
‘குறைந்தபட்ச செயல்திறன் வளையத்திற்குள் 5 சதவீத ஊழியர்கள்’ : டிசிஎஸ் முடிவு

‘குறைந்தபட்ச செயல்திறன் வளையத்திற்குள் 5 சதவீத ஊழியர்கள்’ : டிசிஎஸ் முடிவு

மும்பை, மே 22 - இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தனது சமீபத்திய ஊதிய உயர்வு மற்றும் மதிப்பீட்டுச் சுழற்சியில் குறைந்தபட்ச செயல்திறன் வளையமான ‘பேண்ட் டி’ (Band D) பிரிவின்கீழ் குறைந்தது 5 சதவீத ஊழியர்களை வகைப்படுத்து மாறு தனது மேலாளர்களுக்கு உத்தர விட்டுள்ளது.

அண்மையில் அந்நிறுவனம் மேற்கொண்ட பெரும் ஆள் குறைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, ஊழியர்களிடையே புதிய வேலைவாய்ப்புப் பாதுகாப்பற்ற தன்மையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நிறுவனத்தின் இலக்கும் அழுத்தமும்

நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அனுப்பியுள்ள உள் மின்னஞ்சல்களின்படி, வணிகப் பிரிவுகளின் பொறுப்பாளர்கள் ஆரம் பத்தில் சுமார் 3 சதவீத ஊழியர் களை (ஏறத்தாழ 17,500 பேர்) மட்டுமே ‘குறைந்த செயல்திறன் உடைய வர்கள்’ என அடையாளம் கண்டிருந்த னர்.

ஆனால், நிறுவனம் நிர்ண யித்துள்ள 5 சதவீத இலக்கை எட்டும் பொருட்டு, மேலும் பல ஊழியர்களை தீவிரமாக ஆய்வு செய்து ‘பேண்ட் டி’ பிரிவில் சேர்க்குமாறு மனிதவளத் துறை மேலாளர்களை வற்புறுத்தி வரு வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 5,84,519 ஊழியர்களைக் கொண்டுள்ள டிசிஎஸ் நிறுவனத்தில், இந்த 5 சதவீத விநியோக முறை அமல்படுத்தப்பட்டால் சுமார் 29,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த மிகக் குறைந்த செயல்திறன் பட்டியலின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்.

ஊழியர்களின் கவலைகளும் விளைவுகளும்

பொதுவாக ‘பேண்ட் டி’ பிரிவில் வகைப்படுத்தப்படும் ஊழியர்களுக்கு மாறுபடும் ஊதியம் (Variable Pay) குறைக்கப்படுவதுடன், தற்போதைய திட்டங்களில் (Projects) இருந்து விடு விக்கப்பட்டு, செயல்திறன் மேம் பாட்டுத் திட்டங்களுக்கு உட்படுத்தப் படுவார்கள்.

அங்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களது செயல்திறனை நிரூபிக்கத் தவறும்பட்சத்தில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே, கடந்த நிதியாண்டில் ‘பேண்ட் டி’ பிரிவில் இருந்த பல ஊழி யர்கள் உட்பட சுமார் 2% ஊழியர்களை (ஏறத்தாழ 12,200 பேரை) நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்த நிலையில், மீண்டும் இத்தகைய இலக்கு அடிப்ப டையிலான கட்டாய மதிப்பீட்டு முறை கொண்டுவரப்பட்டுள்ளது ஊழியர் களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.