தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிசிஎம்எஸ் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்!

26 Jun 2026, 1:37 am
டிசிஎம்எஸ் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்!

டிசிஎம்எஸ் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்!

நாமக்கல், ஜூன் 25- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் உற்பத்தியா ளர்கள் விற்பனை சங்கத்தில் அவுட்சோர்சிங் முறையை அமல்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரி வித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் நடத்திய சமரச பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெற்றனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு கொங்கணாபுரம், மல்லசமுத்திரம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் இந்த சங்கம், விவசாயிகள் கொண்டு வரும் எள், மஞ்சள், பருத்தி உள்ளிட்ட விளை பொருட்களை ஏலம் மூலம் விற்பனை செய்து வரு கிறது.

இங்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக 60-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஊதிய ஒப் பந்தத்தில் 8.5 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்ட நிலையில், மார்ச் மாதம் முதல் தொழிலாளர்களின் பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சமூக பாதுகாப்பு நிதி பிடித்தம் செய்யப்படாமல் சம்பளம் வழங்கப்பட்ட தாக கூறப்படுகிறது

இதன் மூலம் தொழிலாளர் களை அவுட்சோர்சிங் முறைக்கு மாற்ற நிர்வாகம் முயற்சிப்பதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் திங்களன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இத னால், சங்க நிர்வாகம் செவ்வாயன்று வெளி மாவட் டங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து பணிகளை மேற்கொண்டது.

இதையடுத்து ஏற் பட்ட பரபரப்பை தொடர்ந்து, திருச்செங்கோடு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், நகர காவல் ஆய்வாளர் வளர்மதி மற் றும் அரசு அதிகாரிகள் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில், ஜூலை 1 ஆம் தேதி சேலத்தில் தொழிலா ளர் நலத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக் கப்படும் என ஒப்புதல் எட்டப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று மீண்டும் பணிக்கு திரும்ப சம்மதித்தனர்.

இப்பேச்சுவார்த்தையில், சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி, சிபிஎம் நிர்வாகிகள் ஏ. ரங்கசாமி, ஏ.ஆதிநாராயணன், நகரச் செயலாளர் சீனிவாசன், டிசிஎம்எஸ் தொழிற்சங்க நிர்வாகிகள் கந்தசாமி, குருநாதன், வேலுச்சாமி, சரவணன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.