முந்தய பக்கம்

டிசிஎம்எஸ் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

22 May 2026, 12:21 am
டிசிஎம்எஸ் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>டிசிஎம்எஸ் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாமக்கல், மே 21- பேசி தீர்மானிக்கப்பட்ட கூலியை வழங்காமல் காலதாமதம் செய்வதை கண்டித்து, திருச்செங் கோட்டில் டிசிஎம்எஸ் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கம், திருச்செங் கோடு கொங்கணாபுரம், மல்லச முத்திரம், கிளைகளில் வேலை செய்யும் சுமைப்பணி தொழிலாளர் களுக்கு 31.12 2025 ஆம் தேதி உடன் கூலி ஒப்பந்தம் முடிவடைந்து, 1.1.2026 முதல் புதிய கூலி உயர்வு 8.5% கூலி பேசி தீர்வு காணப்பட் டது. பேசிய கூலியை தொழிலா ளர்களுக்கு வழங்காமல் காலதாம தம் ஏற்படுத்தும் நிர்வாகத்தை கண் டித்து, திருச்செங்கோடு டிசிஎம்எஸ் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திருச்செங் கோடு பரமத்தி சாலையில் உள்ள டிசிஎம்எஸ் வளாக பகுதியில் வியா ழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலை வர் எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி னார். கோரிக்கைகளை விளக்கி விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன், சிஐடியு மாவட் டத் தலைவர் எம். அசோகன், சிபிஎம் நகரச் செயலாளர் சீனிவாசன், டிசி எம்எஸ் சங்க செயலாளர் செங்கோ டன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்டச் செயலா ளர் என்.வேலுச்சாமி பேசினார். பழ னிச்சாமி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram