தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கண்ணகிநகர் கார்த்திகா அணிக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான வாகனம் பாராட்டு விழாவில் டிசிசிஎல் தலைவர் பி.சகிலன் வழங்கினார்

19 Nov 2025, 3:33 pm
கண்ணகிநகர் கார்த்திகா அணிக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான வாகனம் பாராட்டு விழாவில் டிசிசிஎல் தலைவர் பி.சகிலன் வழங்கினார்
<p><strong>கண்ணகிநகர் கார்த்திகா அணிக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான வாகனம் பாராட்டு விழாவில் டிசிசிஎல் தலைவர் பி.சகிலன் வழங்கினார்</strong></p> <p>சென்னை, நவ.19- கண்ணகிநகர் கார்த்திகா கபடி அணிக்கு ரூ.25 லட்ச மதிப்பில் அதிநவீன &nbsp;டெம்போ டிராவல் வாக னத்தை தமிழக கேபிள் டிவி கம்யூனிகேசன் நிறுவனத் தின் தலைவர் பி.சகிலன் வழங்கினார். ஆசிய மகளிர் கபடி போட்டி அண்மையில் நடை பெற்றது. இந்தப்போட்டி யில் இந்திய அணி தங்கம் வென்றது. அணியின் துணைத்தலைவர் கண்ணகி நகர் கார்த்திகா அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த &nbsp;கண்ணகி நகர் கார்த்திகா விற்கு தமிழக கேபிள் டிவி கம்யூனிகேசன் லிமிட்டெட் (டிசிசிஎல்) சார்பில் திங்க ளன்று (நவ.17) சென்னை யில் பாராட்டுவிழா நடை பெற்றது. டிசிசிஎல் நிறுவனரும், நியூஸ் தமிழ் தொலைக் காட்சி தலைவருமான பி.சகிலன் வீராங்கனை கார்த்திகாவிற்கு 3 லட்ச ரூபா யும், பயிற்சியாளர் ராஜூ விற்கு 2 லட்சம் ரூபாயும் வழங்கி பாராட்டினார். மேலும், கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவினர் பயன்பாட்டிற் கென ரூ.25 லட்சம் ரூபாய் மதிப்பில் அதி நவீன டெம்போ டிராவல் வாக னத்தையும் அவர் வழங்கி னார். இந்த விழாவில் காவல் துறை கூடுதல் ஆணையர் என்.கண்ணன், குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் ஏ.ராதிகா, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கத்தின் தலைவர் சுப.வெள்ளைச்சாமி, பொதுச் செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், பொரு ளாளர் கோவர்தனன் உள் ளிட்டோர் பாராட்டி பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.