தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரூரில் 3,085 ஏக்கர் கோவில் நில பத்திரப் பதிவுக்கு இடைக்காலத் தடை

4 Nov 2026, 11:04 pm
கரூரில் 3,085 ஏக்கர் கோவில் நில பத்திரப் பதிவுக்கு இடைக்காலத் தடை

கரூரில் 3,085 ஏக்கர் கோவில் நில பத்திரப் பதிவுக்கு இடைக்காலத் தடை

மதுரை, நவ. 4 -கரூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களுக்குச் சொந்தமான 3,085 ஏக்கர் நிலங்களைப் பத்திரப்பதிவுசெய்வதற்கான தடையை நீக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துஉள்ளது.

கரூர் மாவட்டத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி, கல்யாண பசுபதீஸ்வரர், ரவீஸ்வரர், குப்புச்சிபாளையம் விக்ருதீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன. இவற்றில் 3,390 தனிநபர்களின் பெயர்களில் பட்டாவழங்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 3,085 ஏக்கர் நிலங்களைப் பத்திரப்பதிவு செய்வதற்கான தடையை நீக்கிதமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து, ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அரசாணையால் கோவில் நிலங்கள் தனிநபர்களுக்குச் சென்றுவிடும்அபாயம்இருப்பதாகக் கூறி, அதற்கு

தடை விதிக்கக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடும் என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். மேலும், இது பொதுநலன் சார்ந்த விவகாரம் என்றும் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட 3,085 ஏக்கர் கோவில் நிலங்ள் தொடர்பாக எவ்விதப் பத்திரப்பதிவும் மேற்கொள்ளக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.