கால் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
21 Nov 2025, 5:11 pm
<p><strong>கால் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கோவை, நவ.21- உதகையில் கால் டாக்ஸி ஓட்டுநர் தாக் கப்பட்டதைக் கண்டித்து, கோவையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகையில் தங்க வேல் என்ற கால் டாக்ஸி டிரைவர் தாக்கப் பட்டதைக் கண்டித்து, கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் கள் கூட்டமைப்பினர் வெள்ளியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வ மைப்பின் செயலாளர் ஹரிகரன் கூறுகை யில், உதகையில் சுற்றுலா வாகன ஓட்டுநர் கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடை பெற்று கொண்டிருக்கிறது. தனியார் செய லிகள் மூலம் வாடகைக்கு கோவையில் இருந்து உதகைக்கு செல்லும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள், திரும்ப வரும்போது அங்கி ருந்து வாடகை பதிவு எடுக்கக்கூடாது என இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஓட்டுநர்களிடம் ஏற்பட்டுள்ள அச் சத்தை போக்க வேண்டும். இதுகுறித்து அதி காரிகள் இருதரப்பினரையும் அழைத்து பேசி, சுமூக தீர்வு காண வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மேற்கண்ட பிரச்ச னையை மையப்படுத்தி வியாழனன்று கோவை மேட்டுப்பாளையத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர்களும், இதேபோல, உதகையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக் கது.</p>
