முந்தய பக்கம்

தட்கல் ரயில் டிக்கெட் விற்பனையில் முறைகேடு - 65 ஊழியர்கள் கைது!

13 Aug 2026, 12:09 pm
தட்கல் ரயில் டிக்கெட் விற்பனையில் முறைகேடு - 65 ஊழியர்கள் கைது!
<p>தட்கல் டிக்கெட் விற்பனை முறைகேடு தொடர்பாக 2023 முதல் 2026 ஜூன் வரை 65 ஊழியர்கள், 13,580 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.</p><p>மக்களவையில், தட்கல் ரயில் டிக்கெட் விற்பனை முறைக்கேட்டில் ரயில்வே ஊழியர்களுக்கும் இடைத்தரகர்களுக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படும் கூட்டுச் சதி குறித்தும், மேற்குத் ரயில்வே மண்டலத்தில் தட்கல் டிக்கெட் இடைத்தரகர்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்துள்ள நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இதுதொடர்பாக ரயில்வே ஊழியர்கள் மீது அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பது குறித்தும் சுயேச்சை எம்.பி. படேல் உமேஷ்பாய் பாபுபாய் கேள்வி எழுப்பினார். </p><p>இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ரயில்வே சட்டம், 1989-இன் பிரிவு 143-இன் கீழ் குற்றவாளிகள் மீது, ரயில்வே ஊழியர்கள் உட்பட, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், அதாவது 2023 முதல் 2025 வரை மற்றும் 2026 ஜூன் மாதம் வரை, இந்திய ரயில்வேயில் மொத்தம் 65 ரயில்வே ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மேற்குத் ரயில்வேயில் 9 ஊழியர்கள் சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்; மேலும், தட்கல் டிக்கெட் இடைத்தரகர்கள் 13,580 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram