தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளைநிலங்களை நாசமாக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடும் எச்சரிக்கை

19 Jun 2026, 12:45 am
விளைநிலங்களை நாசமாக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடும் எச்சரிக்கை

விளைநிலங்களை நாசமாக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடும் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 18- கெலமங்கலம் அருகே உள்ள டாடா எலக்ட்ரா னிக்ஸ் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரால், 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. இது தொடர் பாக ஓசூர் மாசு கட்டுப் பாட்டு வாரியம் அந்நிறு வனத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விவசாயிகளின் குமுறல்

உள்ளுக்குறுக்கை பகுதி யில் இயங்கி வரும் இந்தத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள், குழாய்கள் மூலம் கால்வாய்களில் விடப்படு வதால் விளை நிலங்களில் 2 அடி உயரத்திற்கு நச்சு நீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால் பயிர்கள் அழுகு வதுடன், கால்நடை களுக்கும் தொற்று நோய்கள் பரவுகின்றன. நிலத்தடி நீரும், கிணறுகளும் மாசடைந்ததால் விவ சாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். விவசாயிகளின் புகாரை யடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நீர் மாதிரி களைச் சேகரித்து ஆய்வு செய்த னர். இதில் ரசாயனக் கழிவு கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, ஓசூர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்நிறுவன இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், நிபந்தனைகளை மீறியதற்காக ஏன் மின் இணைப்பைத் துண்டிக்கக்கூடாது, தொழிற்சாலையை ஏன் மூடக்கூடாது என 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரி எச்சரி க்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் இவ்விவ காரத்தில் தலையிட்டு, நிலங்களை மீட்டெடுத்து, பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.