டாஸ்மாக் கடைகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கிடுக
29 Sept 2026, 2:13 am

டாஸ்மாக் கடைகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கிடுக

கோவை, செப்.28-கோவை மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் மாலை நேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி, சிஐடியு கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர்.இதுகுறித்து மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு பகுதிகளில் மொத்தம் 282 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. புதிய அரசின் கொள்கை முடிவின்படி மாநிலம் முழுவதும் 717 கடைகள் மூடப்பட்டதில், கோவை மாவட்டத்தில் மட்டும் 69 கடைகள் மூடப்பட்டன. இதனால், மூடப்பட்ட கடைகளின் விற்பனை எஞ்சியுள்ள 213 கடைகளுக்கு மாறி, கூட்டமும் விற்பனையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மாலை நேரங்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும் கூட்ட நெரிசல்ஏற்படுகிறது.

மேலும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் பாட்டில்களை சேகரிக்கும் பணியும் கூடுதலாகமேற்கொள்வதால், ஊழியர்கள் பணிச்சுமை மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மது அருந்திய வாடிக்கையாளர்கள் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் வடக்கு கடை எண் 1645, தெற்கு கடை எண் 2304 ஆகிய கடைகளில் பணியாற்றிய இருவிற்பனையாளர்கள் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, டாஸ்மாக் கடைகளில் சட்டம் ஒழுங்கைபராமரிக்கவும், ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் ஏதுவாக, மாலை நேரங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்து கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த ஆட்சியர் உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இந்நிகழ்வில் கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஜான் அந்தோணி ராஜ், மாவட்டச் செயலாளர் கே.செந்தில் பிரபு, பொருளாளர் எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இம்மனுவின் நகல்கள் டாஸ்மாக் கோவை முதுநிலை மண்டல மேலாளர், கோவை வடக்கு மாவட்ட மேலாளர் மற்றும் பொள்ளாச்சி தெற்கு மாவட்ட மேலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என அச்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.