தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

56 minutes before
டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, அக். 13-இரண்டாண்டுகாலமாக கூலியை உயர்த்தி வழங்கமல், தொழிலாளர்களை வஞ்சிக்கும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து மதுபானப்பெட்டிகளையும் ஸ்கேனிங் செய்து வருகின்ற வேலைக்கு, டாஸ்மாக் நிர்வாகம் ஏற்றுக்கொண்ட கூலியை வழங்கிட வேண்டும்.மதுபானப்பெட்டிகளை, கடைகளுக்கு அனுப்ப ஏற்றுக் கூலி ரூ.5 என்பதை டெண்டர் விதிகளில் குறிப்பிட வேண்டும். சட்டப்படியான போனசை தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பாக வழங்கிட வேண்டும். அனைத்து டாஸ்மாக் குடோன்களிலும் சுகாதாரமான குடிநீர், குளியலறை,கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். லோடு பாயிண்ட் மேற்கூரை, பிளாட்ஃபார்ம் டிராலிகள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும்.

ஹேண்ட்லிங் லாஸ் என்ற பெயரில் பணம் கட்ட சொல்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழகம் தழுவிய போராட்டத்தின் ஒருபகுதியாக கோவையில் பீளமேடு முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் அருகே உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி குடோன் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ஜகாங்கீர் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் செயலாளர் எம்.எஸ்.பீர்முகம்மது, சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.ராஜன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். முடிவில் சங்கத்தின் பொருளாளர் அபுதாகீர் நன்றி கூறினார். இதில் திரளான டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர்

டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் குடோன் நிர்வாகி பிரபாகரன் தலைமை ஏற்றார். திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தலைவர் எம்.ராஜகோபால், திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கப் பொருளாளர் த.ஜெயபால், சங்க கமிட்டி உறுப்பினர் உத்திராபதி ஆகியோர் கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினர். காங்கேயம் டாஸ்மாக் குடோன் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வரதராஜன் தலைமை ஏற்றார். இதில் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பாலன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

நாமக்கல்

நாமக்கல் கிருஷ்ணாபுரம் டாஸ்மாக் குடோன் முன்பு சிஐடியு நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க பொருளாளர் செந்தில் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். இதில் சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ரமலேஷ், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தலைவர் ரமேஷ் தலைமைவகித்தார். சுமைப்பணி தொழிலாளர் சங்க துணைச் செயலாளர் லட்சுமணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்டச்செயலாளர் சி.வினோத், பொருளாளர் ஏ.நவீன்சந்திரன், டாஸ்மாக் சங்க மாவட்டத் தலைவர் ஆல்துரை உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இறுதியாக சுமைப்பணி தொழிலாளர் சங்க உறுப்பினர் பார்த்திபன் நன்றி கூறினார். பின்னர் டாஸ்மாக் மாவட்ட மேலாளரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு டாஸ்மாக் குடோன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், உதவிச்செயலாளர் வி.பாண்டியன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் பொன்.பாரதி, க.ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.