தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

31 Jan 2026, 3:56 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

நந்தன் கால்வாய் திட்ட நில எடுப்பு பணிக்கு ரூ.42 கோடி ஒதுக்கீடு

சென்னை, ஜன.31 - நந்தன் கால்வாய் திட்ட நில எடுப்பு பணிக்கு ரூ.42  கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட  மக்களின் முக்கியக் கோரிக்கை, நந்தன் கால்வாய் திட்டம்.  சாத்தனூர் அணையின் உபரிநீர் தென்பெண்ணை ஆறு  மூலமாகக் கடலில் கலப்பதைத் தடுத்து, அதை விவசாயி களின் வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்தும் திட்டமாகும். இதற்குச் சாத்தனூர் அணையில் இருந்து 23 கிலோமீட்டர் நீள ஊடு கால்வாய் மூலமாக நந்தன் கால்வா யுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. செஞ்சி, விக்ரவாண்டி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இது இருந்து வந்த நிலையில், தற்போது இந்தத் திட்டத்துக்கான நில எடுப்பு பணிக்கு ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோரிக்கைக்காக தமிழ்நாடு சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

பணி வரன்முறைப்படுத்தக் கோரி பிப்.26-இல் டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

சென்னை, ஜன. 31 - பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பிப்.26 அன்று வேலை நிறுத்தம் நடைபெறும் என்று டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக்கூட்டம் வெள்ளியன்று (ஜன.30) டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன (சிஐடியு) தலைவர் கே.திருச்செல்வன் தலை மையில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில், டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகளில் 22 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும். நிரந்தர ஊழியர் களுக்கு வழங்கப்படும் சட்டச் சலுகைகளை கடை ஊழியர் களுக்கும் வழங்க வேண்டும். காலி மதுபாட்டில் திரும்ப  பெறும் திட்டத்தை தனி முகமை மூலம் அமல்படுத்த வேண்டும். சில்லரை விற்பனைக் கடை ஊழியர்களுக்கு நிர்வாகத்தின் மருத்துவத் திட்டத்திற்கு மாற்றாக இஎஸ்ஐ  திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு வயதை 60  ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 40 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி பிப்.26 அன்று வேலைநிறுத்தம் நடைபெறும். இதற்கான அறிவிக்கையை நிர்வாகத்திற்கு வழங்குவ தோடு, முதல் வாரத்தில் மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, 2 ஆவது வாரத்தில் மண்டல அளவிலான ஆயத்த மாநாடு நடத்தப்படும். பிப்.15-20 தேதிகளில் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் பிப்.2-இல் விசாரணை

சென்னை, ஜன. 31- பாமகவின் பெயர், கட்சிக்கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி அல்லது வேறு யாரும் பயன்படுத்தத் தடை  விதிக்கக் கோரி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  அன்புமணி தலைமையிலான பாமகவை அங்கீகரித்த தேர்தல் ஆணையம், தலைவர் பதவியை நீட்டித்து, மாம்பழம் சின்னத்தையும் வழங்கியது. இது தொடர்பாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும்  நவம்பர் 27 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையம் இரு கடிதங்களை அன்புமணி தரப்புக்கு அனுப்பியுள்ளது. இதையடுத்து, சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணை யம் தமது தரப்புக்கே கடிதம் அனுப்பியிருக்க வேண்டும்  என்று சுட்டிக்காட்டிய ராமதாஸ் தரப்பு, அன்புமணிக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக்  கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய் துள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்னிலை யில் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) விசாரணைக்கு வரு கிறது.

போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இடை நிலை ஆசிரியர்கள் போ ராட்டம் நடத்தி வந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிக மாக ஒத்திவைத்துள்ளனர்.  இதனிடையே அமைச்சர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “மூவர் குழு அறிக்கை விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. அதனடிப் படையில் இடைநிலை ஆசிரியர்களது ஊதியப் பிரச்சனைக்கு முடிவு எடுக்கப்படும்” என குறிப் பிட்டுள்ளார்.

திமுக தேர்தல் வாக்குறுதிகள்

மார்ச் 15-இல் வெளியீடு சென்னை: தமிழ கத்தில் வரவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலை யொட்டி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என கட்சி யின் செய்தித் தொடர்பாளர்  டி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார். மார்ச் 10  ஆம் தேதிக்குள் மாநிலம்  முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு  குழுக்களுடன் ஆலோ சனை நடத்திய பின்னரே தேர்தல் அறிக்கையை இறுதி செய்வதாக அவர் தெரிவித்தார். மக்களின் தேவைகளையே முதன் மையாகக் கருதி வாக்கு றுதிகள் தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.