தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டாஸ்மாக் கடைகள் அடைப்பு: வாய்தா கேட்கும் மேலாளர்

27 May 2026, 11:40 pm
டாஸ்மாக் கடைகள் அடைப்பு: வாய்தா கேட்கும் மேலாளர்

டாஸ்மாக் கடைகள் அடைப்பு: வாய்தா கேட்கும் மேலாளர்

ஈரோடு, மே 27- காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் 3ஆவது நாளாக ஈரோடு மாவட் டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று திருப்பூர் மாவட்டத்தில் 2 ஆவது நாளாக கடையடைப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டி கடந்த ஆட்சியில் காலி மது பாட்டிலை திரும்பப் பெறும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

அதன் படி கூடுதலாக அதிகபட்ச சில்லரை விலையு டன் ரூ.10 விலை ஏற்றி விற்கப்பட்டது.

புதிய அரசு பொறுப்பேற்றது முதல் கூடுதல் விலை விற்பனையில் மாற்றம் வந்ததாகக் கூறப்படு கிறது.

இந்நிலையில், காலி மது பாட்டில் திரும் பப் பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் என எல்பிஎப், சிஐடியு, ஏடிபி, பிடிஎஸ், எல்எல்எப், பிஎம்எஸ் மற்றும் விற்பனையா ளர் சங்கங்கள் இணைந்த கூட்டுக்குழுவினர் கெடு விதித்தனர்.

நிர்வாகம் இதனை ஏற்க மறுத்த நிலையில் கடந்த திங்கள் முதல் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடையை திறக்காத ஊழி யர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற் குச் செல்வதும், முற்றுகையிடுவதும் நடந்து வருகிறது.

சங்க நிர்வாகிகளை அழைத்து பேசுவதும், முடிவு எட்டப்படாமல் திரும்புவ தும் வாடிக்கையாகி வருகிறது.

இதில் பங் கேற்ற தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது, ஈரோடு மாவட்டத்தில் தொடங்கிய வேலை நிறுத்தம் பல்வேறு மாவட்டங்களுக் கும் பரவி வருகிறது.

மாவட்ட மேலாளர் முடிவு அறிவிக்காத நிலையில், நாங்கள் வேலை நிறுத்தத்தை தொடர்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதேபோன்று, அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் நாமக்கல் மாவட்ட மதுபானக்கிடங்கு மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு, இரண் டாவது நாளான புதனன்று போராட்டம் நடை பெற்றது.

இப்போராட்டதை வாழ்த்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி பேசி னார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

இதற்கிடையே, கோவை மண்டல டாஸ் மாக் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆலோ சனை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, ஈரோடு, திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழி யர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தீர்க்கப்படாத கோரிக்கைகளை உடனே தீர்க் கக்கோரியும் கோவை மண்டலம் முழுவதும் புதனன்று கடையடைப்பு போராட்டம் நடை பெற்றது.

இதில், கரூர் மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் அடைத்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனிடையே, டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் எப்எல் 2 கடை களில் கூட்டம் அலைமோதியது.

எப்எல் 2 கடைகளில் உறுப்பினர்களுக்கு மட்டுமே மது வகைகள் வழங்கப்பட வேண்டும் என்கிற விதி உள்ள நிலையில், அதனை புறம்தள்ளி அனை வருக்கும் மதுவகைகளை எப்எல்2 – வில் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், கோவை மாவட்டத்தில் நான்கு எப்எல் 2 கடைக ளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதனை யடுத்து சுதாரித்துக்கொண்ட எப்எல்2 நிர்வா கத்தினர், சத்தமில்லாமல் மற்ற பல எப்எல்2 கடைகளையும் அடைத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.