மாதர் சங்கப் போராட்டத்தால் டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட நடவடிக்கை
3 Jun 2026, 12:30 am
<p><strong>மாதர் சங்கப் போராட்டத்தால் டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட நடவடிக்கை</strong></p><p>மாதர் சங்கப் போராட்டத்தால் டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட நடவடிக்கை மேல்மருவத்தூர், ஜூன் 2- செங்கல்பட்டு மாவட்டம், கீழ்மருத் ்தூர் கிராமப்பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடையை மூடக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு மது அருந்துபவர்களால் வசிப் பவர்களுக்கு இன்னல்களும், சுகாதார சீர்கேடும் ஏற்படுவதோடு, இரவு நேரத்தில் பெண்கள் கடந்து செல்ல அச்சப்படும் நிலை யும் உள்ளது. ஏற்கனவே கடையை இடமாற் றம் செய்வதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உறுதியளித்தும், ஜூன் 1 அன்று கடை இயங்கி யதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் முற்றுகையிட்டனர். அதிகாரிகள் ஒரு மாத அவகாசம் கேட்டதை பொதுமக்கள் ஏற்க மறுத்த தால், உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கடை தற்காலி கமாக மூடப்படும் என அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தில் மாதர் சங்க மாநில துணைச் செயலாளர் சித்ரகலா, மாவட்டத் தலைவர் அனுசுயா, மாவட்டச் செயலாளர் க.ஜெயந்தி, மாவட்டப் பொருளாளர் நவ ரத்தினம் மற்றும் கீழ்மருவத்தூர் கிளை நிர்வாகிகள் மரகதம், கஸ்தூரி, தமிழ்ச் செல்வி, சம்மன்ஸ், புவனேஸ்வரி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.</p>
