தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி அக்.13- ஆர்ப்பாட்டம்

yesterday
டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி அக்.13-  ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி அக்.13- ஆர்ப்பாட்டம்

சேலம், செப்.14-டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி அக்டோபர் 13 ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் குடோன்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) அறி வித்துள்ளது.

சேலம் வி.பி.சிந்தன் நினைவ கத்தில் சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமையில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் இவவறிவிப்பு வெளியிடப்பட்டது. கூட்டத்தில் சம்மேளனப் பொறுப்பாளர் எம்.சந்திரன், பொதுச்செயலாளர் ஆர்.அருள்குமார், சிறப்பு தலைவர் எஸ்.குணசேகரன், மாநிலப் பொருளாளர் குமார், உதவித்தலைவர் ஏ.கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கென்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும், சரக்கு பரிவர்த்தனை மதிப்பில் இரண்டு சதவீதம் நல நிதியை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழி

லாளர்களை 24 மணி நேரமும் பணி செய்யப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, பழைய முறையில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை பணி வழங்க வேண்டும் எனவும், அக்டோபர் 4 ஆம் தேதியன்று சேலம் மாவட்டத்தில் சம்மேளனத்தின் வெள்ளி விழாவைச் சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானிக் கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.