நீதிமன்ற தீர்ப்பின் பெயரால் சரக்கு விலையை உயர்த்திய டாஸ்மாக்
4 Dec 2025, 3:52 pm
<p><strong>நீதிமன்ற தீர்ப்பின் பெயரால் சரக்கு விலையை உயர்த்திய டாஸ்மாக்</strong></p>
<p>தமிழ்நாட்டில் மது விற்பனையை தனியார் நடத்திய போதும், அதன் பிறகு கடந்த சுமார் 20 ஆண்டுகளாக அரசு நடத்தும் போதும் மொத்த விற்பனையாளர், தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் தான். பல்வேறு பெயர்களில் அர சின் கஜானாவிற்கு பணம் வந்தா லும் டாஸ்மாக் நிறுவனம் சில்லரை விற்பனையில் ஈடுபட்ட பிறகு அதன் மூலம் வரும் வருவாயில் தான் அரசு நிர்வாகம் நடக்கிறது எனக் கூறு வோர் பலர் உண்டு. ஆனால், அதனை விற்கும் விற்பனையாளர் கள் உள்ளிட்ட பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்கக்கூடாது என்பது வேறு விசயம். இவ்வாறு கூடுதல் விலை வசூலிக்கப்படுவதற்கு காரணம் சில்லரை விற்பனைக் கடையை ஒட்டியுள்ள குடிப்பகம் தான் (மதுபானக்கூடம்). அங்கே விற்கப்படும் பண்டங்களுக்கு விலை கட்டுப்பாடு எதுவும் கிடை யாது. காரணம் அது பெரும்பாலும் அரசியல் பிரமுகர்களால் நடத்தப் படுவதுதான். இதனால் சில்லரை விற்பனை கடையில் ரூ.5 முதல் கூடு தல் விலை என்பது சாதாரணமாகி விட்டது. விலை கட்டுப்பாட்டு சட் டம் எதுவும் நடைமுறையில் இருப்ப தாகவே தெரியவில்லை. விற்ப வர்கள் பாடு, வாங்குபவர்கள் பாடு. ஆனால் புகார் வந்தால் நடவ டிக்கை எடுக்கப்படும். ரூ.5 கூடுத லாக விற்றால் சில ஆயிரங்கள் வசூலிக்கப்படும். ரூ.10 எனில் தற்கா லிக பணி நீக்கம். விற்பனையாளர் 6 மாதங்களுக்கு கடை பக்கம் போக முடியாது. அதன் பிறகு வேறு கடைக்கு இடமாற்றம் செய்யப்படு வர் என்பது விதி. ஆனால் இடைப் பட்ட 6 மாத காலத்திற்கு அவர் சட் டம் இருந்தாலும் பிழைப்பூதியம் எதுவும் பெற முடியாது. இவ்வாறு பணியாளர்கள் தண்டிக்கப்படுவர். ஆனால், குடிப்பகம் நடத்துவோ ருக்கு இதுபோன்ற பிரச்சனை இல்லை. ஆனால் இருவரும் உபரி வருமானத்தின் ஒரு பகுதியை அர சுக்கும், அரசாங்கத்திற்கும் அளிக்க வேண்டியது கட்டாயம். இது ஒருபுறமிருக்க மதுப்பிரியர் களின் பொறுப்பில்லாத தனத் தால் பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்று விளம்பரம் செய் யப்படுகிறது. ஆனால், இவர்கள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொண்டு பாட்டில்களை தூக்கி எறிந்து விட்டு போய் விடுகின்றனர். அவை பல பிரச்சனைகளை ஏற் படுத்துகிறது. எனவே காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுங் கள் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி யிருக்கிறது. இதனை சோதனை ஓட்டமாக சில மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது. தற்போது ஈரோடு மாவட்டத்திலும் அமலுக்கு வந்திருக்கிறது. பணத்தை வாங்கி, பாட்டில்களை கொடுத்துக் கொண் டிருந்த பணியாளர்கள், இனி விற் கும் பாட்டிலுக்கு எந்த கடையில் விற்கப்பட்டது என ஸ்டிக்கர் ஒட் டிக் கொடுக்க வேண்டும். மதுப்பிரி யர் அந்த பாட்டிலை காலி செய்து விட்டு அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை கிழிக்காமல் மீண்டும் அதே கடைக்கு உடையாமல் எடுத்துச் சென்று கொடுக்க வேண் டும். அதற்காக வாங்கும் போது கூடுதலாகக் கொடுத்த தொகை ரூ.10 திருப்பி அளிக்கப்படும் அல்லது மீண்டும் சரக்கு வாங்கும் போது அதில் நேர் செய்யப்படும். இது சரி தானே என்று தோன்றும் போது, முதல் நாள் வரை சரக்கு வாங்கியவர் அந்த பாட்டிலுக்கான விலையையும் சேர்த்தே கொடுத் தார். ஆனால், இன்று முதல் அந்த பாட்டில் டாஸ்மாக் நிர்வாகத்தின் பாட்டில் அதற்கான விலை ரூ.10 ஐ கூடுதலாக மதுப்பிரியர் கொடுக்க வேண்டும். அவ்வாறு கூடுதலாக கொடுத்த தொகையை மீண்டும் அதே கடைக்குச் சென்று கொடுத் தால் கூடுதலாக கொடுத்த தொகையை திரும்பப் பெறலாம். திருப்பிக் கொடுக்காவிட்டால் நிர் வாகத்திற்கு நட்டமில்லை. ஆனால் வாடிக்கையாளருக்கு விலை உயர்வு ரூ.10. இவ்வாறு பொதுநல வழக்கு என்ற பெயரில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று. அதை சில்லரை விற் பனை கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர், விற்பனையா ளர் மற்றும் உதவி விற்பனையாளர் களை கொண்டு தான் நிறை வேற்ற வேண்டும் என்று கூற வில்லை. ஆனால் சில்லரை விற் பனை கடை பணியாளர்களையும் ஏமாற்றி, மதுப்பிரியர்களையும் ஏமாற்றும் வகையில் திட்டத்தை செயலாக்க நிர்வாகம் துணிந்துள் ளது. இதன் மூலம் வாடிக்கையா ளர்களை தக்க வைக்கும் சூழ்ச்சி யும் அடங்கியிருப்பதாக கூறப்படுகி றது. இத்திட்டத்தை அமலாக்கும் விதத்தை பற்றிய தொழிற்சங்கங் களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். -சக்திவேல், ஈரோடு</p>
