தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாட்டில் ஒன்றுக்கு ரூ. 10 கூடுதல் வசூல்: தொடரும் குழப்பம்

3 Jun 2026, 9:29 pm
பாட்டில் ஒன்றுக்கு ரூ. 10 கூடுதல் வசூல்: தொடரும் குழப்பம்
<p><strong>பாட்டில் ஒன்றுக்கு ரூ. 10 கூடுதல் வசூல்: தொடரும் குழப்பம்</strong></p><p>டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. காலி மது பாட்டில்களை மீண்டும் கடையில் ஒப்படைக்கும்போது இந்தப் பத்து ரூபாயை வாடிக்கையாளருக்கே திரும்ப வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த ஆட்சிக் காலத்திலிருந்தே இத்திட்டம் செயல்பட்டு வருவதாக அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்திருந்தார். எனினும் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவதில் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் நடைமுறைச் சிக்கல்கள் நீடிக்கின்றன. கடைகளுக்கான வாடகை மற்றும் மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை ஊழியர்களே ஏற்க வேண்டிய நிலை நிலவுவதால்தான் அவர்கள் கூடுதல் தொகை வசூலிப்பதாக ஊழியர்கள் தரப்பு தெரிவிக்கிறது. முதல்வரின் அறிவுறுத்தல் இதனிடையே, துறை அமைச்சர் விக்னேஷ் மற்றும் அதிகாரிகளுடனான முதற்கட்ட ஆலோசனையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், மூன்று முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி, மூடப்பட வேண்டிய 717 கடைகளும் எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன என்ற முழு விவரங்களையும் வெளிப்படையாக பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மீதமுள்ள கடைகளை கால தாமதமின்றி உடனடியாக மூட முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள நிர்வாகச் சிக்கல்களைக் களைந்து கூடுதல் கட்டண முறைகேடுகளை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்றும் கூறினார். ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் அரசின் சார்பில் முக்கிய அடுத்தகட்ட அறிவிப்புகளும் விரிவான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.