சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்
26 Nov 2025, 4:29 pm
<p><strong>சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்</strong></p>
<p>கோவை, நவ.26- பீளமேடு டாஸ்மாக் குடோன் பகுதி யில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சரி செய்ய வேண்டும் என டாஸ்மாக் ஊழி யர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை மாவட்டம், பீளமேடு பகுதி யில் உள்ள டாஸ்மாக் குடோன் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர் அலுவல கம், அரசு நிறுவனமான சிந்தாமணி கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மாதம் ரூ.8 லட்சம் வாடகை யில் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் மண்டல அலுவலகம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளின் வணிகத்தையும், கோவை மாநகர் தெற்கு வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கான சரக்குகளையும் கையாள்கிறது. டாஸ்மாக் குடோன் மற் றும் மண்டல அலுவலகத்திற்கு ஒவ் வொரு நாளும் 500க்கும் மேற்பட் டோர் பணி நிமித்தமாக வந்து செல்கின்ற னர். பெண்கள் மற்றும் மாற்றுத்திறனா ளிகளும் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள கழிப்பறை பராமரிப்பின்றி சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் வகையில் இருக்கிறது. அதனை சரி செய்து தரக்கோரி தொடர்ச்சியாக சிஐ டியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியு றுத்தி வருகிறது. ஆனால் டாஸ்மாக் நிறு வன அதிகாரிகள் ஊழியர்களின் நலன் கள் மீது அக்கறை இல்லாமல் செயல் பட்டு வருகின்றனர். மேலும், இப்பகுதிக்கு வந்து செல் லும் சாலை குண்டும் குழியுமாக காணப் படுகிறது. மழைக்காலங்களில் அங்கு தண்ணீர் தேங்கி விபத்து ஏற்படுத்தும் நிலையிலும், வெயில் காலங்களில் சாலைகளில் புழுதி பறந்து வாகனங்க ளில் செல்லும் ஊழியர்கள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளை யும் சந்தித்து வருகின்றனர். இதுசம்பந்த மாக அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எங்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து அக்கறை இல்லாமல் இருக் கின்றனர். உடனடியாக இப்பிரச்சனை களை சரி செய்யாவிட்டால், சாலையில் தேங்கி இருக்கும் மழைநீரில் நாற்று நடும் போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என டாஸ் மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரி வித்தனர்.</p>
