நவ.15 முதல் டாஸ்மாக் ஊழியர்கள் சீருடையுடன் பணிபுரிய உத்தரவு
24 Sept 2026, 8:44 pm

நவ.15 முதல் டாஸ்மாக் ஊழியர்கள் சீருடையுடன் பணிபுரிய உத்தரவு

விருதுநகர், செப்.25-தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில் லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் நவ.15 ஆம் தேதி முதல் சீருடையுடன் பணிபுரிய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என 22,877 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர் களுக்கு புதிய சீருடை வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.அதன்படி, மேற்பார்வையாளர்கள் வெளிர் நீல நிற சட்டை, அடர் நீல நிற பேன்ட் அணிய வேண்டும். விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் வெளிர் பழுப்பு நிற சட்டை, அடர் சாம்பல் நிற பேன்ட் அணிய வேண்டும் என மாதிரிப் புகைப்படங்களுடன் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சீருடைக்கான துணிகளை வாங்க ஒவ்வொரு ஊழியரின் வங்கிக் கணக்கிலும் செப்.30-ம் தேதிக்குள் தலா ரூ.6,000 வரவு வைக்கப்படும். இந்தத் தொகையில் அக்.31-ம் தேதிக்குள் கோ-ஆப்டெக்ஸ்நிறுவனத்தில் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட 3 செட் சீருடைக்கான துணிகளை வாங்க வேண்டும். சீருடையின் இடதுமார்புப் பகுதியில் டாஸ்மாக் சின்னம் இடம்பெற வேண்டும். நவ.10-ம் தேதிக்குள் சீருடைகளைத் தைத்துக் கொள்ள வேண்டும்.

நவ.15-ம் தேதி முதல் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களும் அங்கீகரிக்கப் பட்ட சீருடையை அணிந்துதான் பணிபுரிய வேண்டும். இதனை மாவட்ட டாஸ் மாக் நிர்வாக மேலாளர்கள் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.