தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்

16 Feb 2026, 2:37 pm
நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்
<p><strong>நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்</strong></p> <p>சென்னை, பிப்.16 - பிப்.18 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் &nbsp;ஈடுபட உள்ளதாக டாஸ்மாக் நிறுவன தொழிற் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன்முறை &nbsp;செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; ஓய்வு பெறும் வயதை 60 ஆக &nbsp;உயர்த்த வேண்டும்; இ.எஸ்.ஐ திட்டத்தில் சேர்க்க வேண்டும்; காலி மது பாட்டில்களை &nbsp;திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் &nbsp;என்பன உள் ளிட்ட 12 அம்ச கோ ரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திங்களன்று &nbsp;சென்னை யில் ஒருங்கி ணைப்புக் குழு சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடை பெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் கூறுகையில், 12 நாட்களாக &nbsp;தொடர் காத்திருப்பு, மறியல் போராட்டம் நடத்தி வரும் தொழிற்சங்கங்கள், தற்போது &nbsp;கூட்டாக சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் &nbsp;உண்ணாநிலை போராட்டம் நடத்துகின்றனர். &nbsp;அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் டாஸ் மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற மறுப்பது நியாயமற்றது. தொழிலாளர் களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேசி &nbsp;தீர்வு காண வேண்டும். பிப்.18 முதல் தொடர் &nbsp;வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளனர்&rdquo; என்றார். டாஸ்மாக் மாநில சம்மேளன (சிஐடியு) பொருளாளர் ஜி.சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை தமிழ்நாடு &nbsp;அரசு போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் தொடங்கி வைத்தார். சிஐடியு அகில இந்திய துணைத் &nbsp;தலைவர் அ.சவுந்தரராசன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீர பாண்டியன், துணைச் செயலாளர் என்.பெரியசாமி, டாஸ்மாக் மாநில சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் உள்ளிட்ட பலர் பேசினர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.