டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும்
16 Feb 2026, 2:37 pm

டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும்

தொழிற்சங்க கூட்டுக்குழு மண்டல உண்ணாவிரதம்

கோவை, பிப்.16- 23 ஆண்டு காலமாகப் பணி யாற்றி வரும் டாஸ்மாக் கடை ஊழியர்களை பணி வரன்முறைப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுவின் சார் பில் மண்டலம் தழுவிய உண்ணா விரதம் கோவையில் நடைபெற் றது. டாஸ்மாக் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். டாஸ்மாக் நிறு வனத்தின் நிரந்தரப் பணியிடங்க ளில் கடை ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்க ளில் பணியாற்றினால் இரட்டிப்புச் சம்பளம் வழங்க வேண்டும். ஊழி யர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவத் திட்டத்தை அமல்படுத்த வேண் டும். ஊழியர்களின் கல்வித் தகுதிக் கேற்பப் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை மாற்று வழியில் அமல்படுத்தவும், நீண்ட காலமாகப் பணி மறுக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த உண்ணாவிரதம் நடை பெற்றது. கோவை பீளமேடு டாஸ்மாக் எஸ்ஆர்எம் அலுவலக வளாகத் தில் திங்களன்று நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு, சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலு சாமி தலைமை ஏற்றார். சிஐடியு பஞ்சாலை சம்மேளன துணைத் தலைவர் சி. பத்மநாபன் போராட் டத்தைத் துவக்கி வைத்தார். இதில், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜான் அந் தோணி ராஜ், மாவட்டச் செயலா ளர் கே.செந்தில் பிரபு, பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் மண் டல நிர்வாகிகள் ஆறுமுகம், அன்பு, பாரதி, மகேஷ், நவீன், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி கணேசன், கடை மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் மருதமுத்து, விற்பனையாளர் நலச்சங்கம் செல்வராஜ், பாட் டாளி தொழிற்சங்கம் ஜீவா உள்ளிட் டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். போராட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். இப்போராட்டத் தில், கோவை மண்டலத்திற்குட் பட்ட மாவட்டங்களில் இருந்து திர ளான டாஸ்மாக் ஊழியர்கள் பங் கேற்றனர். இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக செவ்வாயன்று வாயிற்கூட்டம் நடத்துவது, பின்னர் 18 ஆம்தேதி முதல் பணிப்புறக் கணிப்பு உள்ளிட்ட தொடர் போராட் டங்களில் ஈடுபடுவது என டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு முடி வெடுக்கப்பட்டுள்ளது.